வரி கட்டாமல் தப்பித்த ஆப்பிள், வறுத்தெடுத்த பிரான்ஸ் அரசு... விளைவு 500 மில்லியன் யூரோ வரி..?

ஆப்பிள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடை போட்டு கல்லா கட்டுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கு போகும் போது, அதை ஒரு தனி துணை நிறுவனமாகவே பதிவ் செய்து கொண்டு வியாபாரத்தைத் தொடங்கும். உதாரணமாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தை ஆப்பிள் இந்தியா என அழைப்போம். அமெரிக்காவில் தான் Apple Inc.,

அதே போலத்தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும். பிரான்ஸில் ஆப்பிள் தன் துணை நிறுவனமான ஆப்பிள் பிரான்ஸை நிறுவி பிரெஞ்சுக்காரர்களிடம் தன் பிரமாதமான ஐபோன்களை விற்று கல்லாகட்டுகிறது.

இப்போது ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் துணை நிறுவனம் அந்தந்த நாட்டின் வருமான வரிச் சட்டங்கள் படி ஈட்டிய வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.

சம்பாதிப்பது பிரான்ஸ் , லாப மாற்றம்  அயர்லாந்து

சம்பாதிப்பது பிரான்ஸ் , லாப மாற்றம் அயர்லாந்து

ஆப்பிள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்கு ஒரு நாட்டு நிறுவனத்தில் ஈட்டும் லாபத்தை தன் தாய் நிறுவனமான Apple Inc.,-க்கோ அல்லது தன் துணை நிறுவனங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கோ மாற்றம் செய்ய்லாம். அதை (Profit Transfer) என்பார்கள்.

அயர்லாந்துக்கு வரி

அயர்லாந்துக்கு வரி

இப்படி ஆப்பிள் பிரான்ஸ் நிறுவனம் ஈட்டிய லாபத்தை ஆப்பிள் அயர்லாந்துக்கு மாற்றம் செய்துவிடுகிறார்கள். இப்போது பிரான்ஸ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வரி கட்டத் தேவை இல்லை. இது சட்டப் படி சரி தான். ஆப்பிள் அயர்லாந்து நிறுவனம் அயர்லாந்து அரசுக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்.

அத்தனையும் நட்டம்

அத்தனையும் நட்டம்

ஆக பிரான்ஸ் அரசின் வசதிகள் மற்றும் சலுகைகள், பிரெஞ்சு நாட்டு மக்களின் பணத்தை வைத்து பார்த்த லாபம் என பிரான்ஸை முழுமையாக பயன்படுத்திவிட்டு துக்கி எரிந்து விடுகிறார்கள். காரணம் பிரான்ஸில் வரி அதிகம். அயர்லாந்தில் வரி மிகக் குறைவு.

உதாரணம்

உதாரணம்

பிரான்ஸில் 20% வரி, அயர்லாந்தில் 10% வரி என வைத்துக் கொள்வோம். ஆப்பிள் பிரான்ஸ் நிறுவனம் பிரெஞ்சு அரசின் சலுகைகளையும், சந்தைகளையும் பயன்படுத்தி 100 ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறது. இப்போது பிரான்ஸ் நாட்டில் வரி செலுத்த வேண்டும் என்றால் 100 ரூபாயில் 20% கனக்கிட்டால் 20 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதுவே ஆப்பிள் பிரான்ஸ் சம்பாதித்த லாபத்தை அப்படியே ஆப்பிள் அயர்லாந்துக்கு லாப மாற்றம் செய்தால் வெறும் 10 ரூபாய் வரி செலுத்தினால் போதும்.

ஆப்பிள் இன்க் வரி செலுத்தும்

ஆப்பிள் இன்க் வரி செலுத்தும்

இந்த நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசு தொடர்ந்து கண்டித்து வந்தது. ஐரோப்பாவில் எந்த நாட்டில் வியாபாரம் செய்தால் ஒரே மாதிரியான டெக்னாலஜி சார்ந்த நிறுவாங்கள் தங்கள் லாபத்தில் 3% வரி செலுத்த வேண்டும் என ஒரு சட்டத்தைக் கூட கொண்டு வருகிறதாம். இதை Union-wide 3 percent tax எனச் சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க ஆப்பிள் பிரான்ஸ் நிறுவன கணக்கு வழக்குகளை பிரான்ஸ் அரசு பிரித்து மேய்ந்திருக்கிறது. அதை பொது வெளியிலும் கொடுக்க இருக்கிறது. இதை எல்லாம் பார்த்த ஆப்பிள் பிரான்ஸ் நிறுவனத்தோடு ஒரு டீலுக்கு வந்திருக்கிறதாம். இதுவரை ஆப்பிள் பிரான்ஸ் மூலம் பிரெஞ்சு அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை (இதுவரை ஆப்பிள் பிரான்ஸ் செலுத்த வேண்டிய வரித் தொகையை) ஒரே தவணையில் செலுத்த முன் வந்திருக்கிறது.
சுமார் 500 மில்லியன் யூரோக்கல் என பல்வேறு வெளிநாட்டு பத்திரிகைகள் கணித்திருக்கிறாஅர்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+