தலைப்பைப் படித்த உடனேயே இது அரசு வேலை என புரிந்து கொண்டீர்களா..! சபாஷ் சரி தான். தமிழக அரசு 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு கல்வித் தகுதி தேவை இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.
வழக்கம் போல அடித்து நொறுக்கிவிட்டார்கள் நம் தமிழக இளைஞர்கள். 14 பணி இடங்களுக்கு 4,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றன. இந்த தேர்வுக்கே சராசரியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்களாம்.
70 பேரின் விண்ணப்பங்கள் ரத்து செய்யபப்ட்டு 3,930 பேருக்கு தேர்வு அனுமதிக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்களாம்.
அரசாங்க காசு
இந்த 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு 15,700 முதல் 50,000 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயித்திருக்கிறார்களாம். இதில் இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்களாம். மொத்த 14 பணி இடங்களில் 4 General Category, 4 OBC, 3 MBC, 2 SC, 1 STs.
யோகி ஆதியநாத் மாநிலத்தில்
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் உத்திரப் ப்ரிஅதேசத்தின் 62 பியூன் வேலைக்கு 93,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இந்த 93,000 பேரில் தங்கள் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முனைவர் பட்டங்கள் (டாக்டர் பட்டம்) பெற்றவர்களும் உண்டு.
மும்பையில்
மகாராஷ்டிரத்தில் மந்திரலயாவில் 13 உணவு பரிமாறுபவர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பிட்த்திருந்தனர். இதிலும் கணிசமாக பட்டப் படிப்பு படித்தவர்கள் எல்லாம் சரமாறியாக விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் கேட்கப்பட்டிருந்த கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி தான்.
NSSO
சமீபத்தில் மோடி அரசின் அராஜக நடவடிக்கைகளில் ஒன்றாக தேர்சிய மாதிரி சர்வே அமைப்பின் தரவுகள் மத்திய அரசால் வெளியிடப் படாமல் இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018லேயே வெளியாகி இருக்க வேண்டிய வேலைவாய்ப்பு விவரங்கள் வரும் மார்ச் 2019-ல் தான் வெளியிட இருக்கிறார்களாம். அதில் சொல்லப்பட்டது போலவே இந்தியவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புகள் சரிந்து வருவதையே இது காட்டுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications