வால்மார்ட் பின் வாங்குகிறதா..? ஆம், லாபம் இல்லனா ஃப்ளிப்கார்ட்ட வித்துறுவோம்..!

கடந்த மார்ச் 2018-ல் தான் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை 16 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி கையகப்படுத்திக் கொண்டது.

காரணம் தன் வால்மார்ட் பிராண்ட் பொருட்களை இந்தியாவில் ஆன்லைன் முறையிலும் விற்கத் தான் இத்தனை பெரிய டீல். வால்மார்ட்டும், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்குள் இத்தனை நாள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமைத்துக் கொண்டிருந்தது. அதன் நிறைவாக ஃப்ளிப்கார்ட்டின் நிறுவனர்களை பாலியல் வழக்கைக் காட்டி வெளியே அனுப்பியது.

எல்லாம் முடிந்து இப்போது தான் சில மாதங்களுக்கு முன் தன் வியாபாரத்தைப் பார்க்கலாம் என பேச்சை எடுத்திருந்தது. அதற்குள் இந்திய அரசு தன் இ காமர்ஸ் கொள்கைகள் மூலம் வால்மார்ட்டின் மொத்த வியாபாரத்தும் வேட்டு வைத்துவிட்டது.

என்ன சொல்கிறார்கள்

என்ன சொல்கிறார்கள்

சமீபத்தில் மார்கன் ஸ்டான்லி என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வால்மார்ட் இப்போதைக்கு இந்தியாவையோ அல்லது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தையோ விட்டு வெளியேறத் தயாராக இல்லை. ஆனால் ஒருவேளை நீண்ட காலத்துக்கு லாபகரமான எந்த ஒரு வியாபாரமும் அமையவில்லை என்றால் தைரியமாக இந்தியாவிலிருந்து பின் வாங்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லி இருக்கிறது.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

சீனாவில் உள்ள சட்ட திட்டங்கள், பொருட்களின் விலை, தயாரிப்பு முறை என பல்வேறு காரணிகள் அமேஸானுக்கு எதிராக இருந்தது. அமேஸான் நிறுவனத்தால் சீனாவில் தாக்கு பிடிக்க முடியாமல் (குறைந்தபட்ச லாபம் கூட இல்லாமல்) நிறுவனத்தை நடத்த முடியாது என 2017-ம் ஆண்டிலேயே பின் வாங்கியது. அதே போல் வால்மார்ட் கூட ஃப்ளிப்கார்ட் மூலம் சரியான லாபங்களைப் பார்க்க முடியவில்லை என்றால் இந்தியாவில் இருந்து வெளியேற வாய்ப்பிருக்கிறதாம்.

முதலீட்டாளர்கள் என்ன சொல்வார்கள்

முதலீட்டாளர்கள் என்ன சொல்வார்கள்

வால்மார்ட் குழுமத்தின் இயக்குநர் குழுவும், முதலீட்டாளர்களும் ஒப்புக் கொண்டால் இந்தியாவில் இருந்து எளிதில் வெளியேறி விடலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை என்ன செய்வார்கள். வேறு ஏதாவது இந்திய நிறுவனத்திடம் விற்றால் தான் உண்டு. அனேகமாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றாலும் விற்கலாம்.

இவர்களிடமா..?

இவர்களிடமா..?

காரணம், இந்தியாவில் கொண்டு வரப்பட்டிருக்கும் இ காமர்ஸ் கொள்கைக்கு எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்தாலும் இந்தியாவின் இணைய வெளியில் வியாபாரம் பார்க்க முடியாது. ஆக வாங்கினால் இந்திய நிறுவனங்கள் தான். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர இந்த இ காமர்ஸ் தளத்தில் அதிக நாட்டமுள்ள பெரிய வியாபாரக் குழுமங்கள் வேறு யாரும் இல்லை என்பதால் ரிலையன்ஸ் நிறுவனமே ஃப்ளிப்கார்ட்டை வாங்கும் என தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+