இவர் மரணத்தின் விலை 1015 கோடி ரூபாய்..? உறைந்து போன முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகம் குழம்ப வேண்டாம். விஷயம் இத் தான் Quadriga CX என்கிற நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி இறந்து விட்டார்.

 

இந்த Quadriga CX என்கிற நிறுவனம் க்ரிப்டோ கரன்ஸிகளில் முதலீடு செய்திருக்கிறது. அப்படி முதலீடு செய்யும் போதும் க்ரிப்டோகரன்ஸிகளை விற்று பணமாக மாற்றும் போது பாஸ்வேர்டுகளைப் போட வேண்டும்.

பிரச்னை இது தான். அந்த ரகசிய பாஸ்வேர்டுகள், நம் Quadriga CX நிறுவன முதன்மைச் செயல் அதிகாரியோடே போய்விட்டது.

உஷார்யா உஷாரு

உஷார்யா உஷாரு

Quadriga CX நிறுவனத்தின் CEO கெரால்டு காட்டன் (Gerald Cotten) டெக்னாலஜி உலகை அதிகம் நம்பக் கூடியவர். அதே நேரத்தில் ஹேக்கர்களின் திறமையையும் நம்பக் கூடியவர். ஆதலல் எப்போது Quadriga CX நிறுவனத்தின் வங்கிப் பரிவர்த்தனைகள், க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்குவது, விற்பது போன்ற அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் தனி ஒருவனாகவே செய்திருக்கிறார்.

காசு இருக்கு ஆனா இல்ல

காசு இருக்கு ஆனா இல்ல

இப்போது இந்த Quadriga CX நிறுவனத்தின் பெயரில் சுமார் 150 மில்லியன் டாலர் (நம் இந்திய ரூபாய் மதிப்பில் 1015 கோடி ரூபாய்) பிட்காயின், லிட்காயின்கள் என பல்வேறு க்ரிப்டோகரன்ஸிகளாக இருக்கின்றனவா. இப்போது அவைகளை எல்லாம் Quadriga CX கணக்கில் கொண்டு வரத் தேவையான பாஸ்வேர்டுகள் இல்லாததால் மொத்த முதலீட்டாளர்களும் உறைந்து போய் இருக்கிறார்களாம்.

மனைவி வாக்குமூலம்
 

மனைவி வாக்குமூலம்

காட்டனின் வீடு முழுவதும் தேடிப் பார்த்துவிட்டார்களாம். Quadriga CX நிறுவனத்தின் தொடர்பான பாஸ்வேர்டுகள் ஒன்றுமே கிடைக்கவில்லையாம். பொதுவாகவே காட்டனின் மின்னஞ்சல்கள் தொடங்கி குறுஞ்செய்திகள் வரை எல்லாமே என்க்ரிப்ட் ஆகி இருக்கிறதாம். கெரால்டு காட்டன் அவ்வளவு உஷாரான பார்ட்டியாம்.

முடியலங்க

முடியலங்க

ஹேக்கர்களை வரவழைத்து தங்களுக்குத் தெரிந்து எல்லா வித்தைகளையும் செய்து பார்த்திருக்கிறார்களாம். ஆனால் எவரால் முறையாக ஹேக் செய்ய முடியவில்லையாம். இப்போது தங்கள் பணத்தைக் கொடுக்கச் சொல்லிக் கேட்கும் முதலீட்டாளர்களுக்கு பணத்தைக் கொடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Quadriga CX company ceo dead with its secret password

quadriga CX company ceo dead with its secret password. That password is the sole access for the 145 million dollar (1000 cr inr) worth crypto currencies
Story first published: Wednesday, February 6, 2019, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X