அசாத்திய வளர்ச்சி கண்ட டெக் மஹிந்திரா... நிகர லாபம் மட்டும் 1203 கோடியா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெக் மஹிந்திரா இந்தியாவின் ஐடி நிறுவனங்களில் ஐந்தாவது பெரிய நிறுவனம். இந்த நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 78,000 கோடி ரூபாய்க்கு மேல்.

 

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழும நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இன்று காலை வர்த்தக நேர தொடக்கம் முதல் இந்த நிறுவன பங்குகள் ஒரு சூப்பர் ஸ்டார் போல செயல்பட்டு வருகின்றன.

என்ன காரணம்..? காலாண்டு முடிவுகள் தான். நேற்று பிப்ரவரி 05, 2019 வர்த்தக நேர முடிவுக்குப் பின் தான் டெக் மஹிந்திரா தன் டிசம்பர் 2018 காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

net profit

net profit

டிசம்பர் 2018 காலாண்டில் 1203 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. இது கடந்த டிசம்பர் 2017 காலாண்டை விட 27 சதவிகிதமும், கடந்த செப்டம்பர் 2018 காலாண்டை விட 13 சதவிகிதமும் அதிகமாம். டாலர் மதிப்பீட்டிலும் டெக் மஹிந்திராவின் வருவாய் 3.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.

share price

share price

இன்று காலை 784 ரூபாய்க்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சுமார் 7 சதவிகிதம் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இப்போது பிப்ரவரி 06, 2019 மதியம் 2.10 மணி அலவில் 803.35 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அதோடு ஏகப்பட்ட தரகு நிறுவனங்கள் டெக் மஹிந்திராவுக்கான புதிய விலை ஏற்ற டார்கெட்டாக 1,002 ரூபாய்க்கு மேல் நிர்ணயித்திருக்கிறார்கள். எடல்வைஸ் தரகு நிறுவனம் டெக் மஹிந்திராவின் இலக்கு விலையாக 1,002 ரூபாயை நிர்ணயித்திருக்கிறது.

january story
 

january story

கடந்த ஜனவரி 2019-ல் இந்திய பங்குச் சந்தைகளில் ஸ்டார்களாக முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுத்தது தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை பங்குகள் தானாம். அதற்கு இந்திய ஐடி நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, பிசினஸ் டீல்களையும் பெற்ரு வருவது தான் எனச் சொல்கிறார்கள் பங்குச் சந்தை வல்லுநர்கள்.

other details

other details

டெக் மஹிந்திரா எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்பட சில மாதங்களுக்கு முன் பெற்ற ANZ region டீல்கள் கைகொடுக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் டிசம்பர் 2018 கனக்குப்படி 1,21,842 பேர் பணி புரிகிறார்களாம். கடத காலாண்டை இவ்ட இந்த காலாண்டில் 3,451 பேர் கூடுதலாக வேலை பார்க்கிறார்களாம்.

Tech mahindra in 5G

Tech mahindra in 5G

ரகுதன் மொபைல் நெட்வொர்க்ஸ் (Rakuten Mobile Network) என்கிற நிறுவனத்தோடு இணைந்து டெக் மஹிந்திரா ஐந்தாம் தலைமுறைக்கான அலைக்கற்றைகளில் பயன்படக் கூடிய next generation (4G & 5G) Software Defined Network laboratories தயார் செய்து வருகிறார்கள். இந்தியாவில் இது போன்ற ஆராய்ச்சிக் கூடங்கள் இதுவே முதல் முறையாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech mahindra quarterly results december 2018 hit the market

Tech mahindra quarterly results december 2018 hit the market and its share price are roaring
Story first published: Wednesday, February 6, 2019, 14:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X