சகுணமே சரியில்லயே..? ஆர்பிஐ கூட்டம் ஒத்தி வைப்பு, கடுப்பாகும் பாஜக..!

இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுக் தொகையாக சுமார் 28,000 கோடி ரூபாயைக்கொடுக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாயின. இதை மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் உறுதி செய்தார்.

ஆனால் மத்திய அரசு எதிர்பார்க்கும் வேகத்தில் ஆர்பிஐ இப்போது செயல்படவில்லை. பாஜக அரசுக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கத்திலே செயல்படுகிறது என பாஜக நிர்வாகிகள் புகார் படிக்கிறார்களாம்.

காரணம் தொடர்ந்து ஆர்பிஐ மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத் தொகையை தர மறுப்பதும், அதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் தானாம்.

தள்ளிப் போன கூட்டம்

தள்ளிப் போன கூட்டம்

மத்திய அரசுக்கு மேலும் ஒரு தொகையை ஈவுத் தொகையாகக் கொடுத்தால் வங்கி தாங்குமா..? தர வேண்டும் என்றால் எவ்வளவு ரூபாய் கொடுக்க முடியும். என ஆர்பிஐ மூத்த அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் பிப்ரவரி 09, 2019-ல் சந்தித்துப் பேச இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இந்த கூட்டத்தை வரும் பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்களாம்.

முதல் கூட்டம்

முதல் கூட்டம்

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் போடப்படும் ஆர்பிஐ கூட்டம் என்பதால், சக்தி காந்த தாஸ் உட்பட ஆர்பிஐ கூட்டத்தில் பங்கேற்க இருப்பவர்கள் அனைவருமே ஒரு எதிர்பார்ப்போடு தான் காத்திருக்கிறார்களாம். அதோடு இந்த கூட்டத்தில் ஆர்பிஐ-ன் நிதி நிலை அறிக்கைகளை அரையாண்டுக்குத் தயார் செய்துவிட்டார்களாம். அதோடு மீதமுள்ள ஆறு மாதங்களுக்கும் எவ்வளவு லாபம் வரும் என ஒரு கணிப்பையும் தயார் செய்து விட்டு தான் மத்திய அரசுக்கான இடைக்கால ஈவுத் தொகையை முடிவு செய்ய இருக்கிறார்களாம்.

ஏன் இந்தத் தொகை

ஏன் இந்தத் தொகை

மத்திய அரசு தற்போது தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் கூட நிதிப் பற்றாக்குறையை 3.4%-க்குள் கட்டுப்படுத்த முடியும் என கணித்திருக்கிறார்களாம். அந்த கணிப்பை அப்படியே செயல்படுத்தவாவது ஆர்பிஐ- இடமிருந்து நிதி கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது மத்திய அரசு. இந்த 2018 - 19 நிதியாண்டுக்கு ஆர்பிஐ 40,000 கோடி ரூபாயை ஈவுத் தொகையாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் கடந்த 2017 - 18 நிதி ஆண்டைப் போல இடைக்கால ஈவுத் தொகையையும் பெற்றால் குறைந்தபட்சம் பிரதமரின் விவசாயக் கடன் பிரச்னைகளையாவது சரிகட்டலாம் என எதிர்பார்க்கிறார்களாம்.

பாஜக புகார்

பாஜக புகார்

புள்ளியியல் துறையில் இரு அதிகாரிகள் வேலைவாய்ப்பு தரவுகளை வெளியிட்டு பாஜக அரசுக்கு கலங்கம் விளைவித்தது போல, இப்போது ஆர்பிஐ அமைப்பும் பழிவாங்கும் விதத்தில் கூட்டத்தைக் கூட்டாமல் காலம் தாழ்த்துவதாக கட்சி மேலிடத்துக்கு புகார் படிக்கிறார்களாம்.
எது எப்படியோ ஆர்பிஐ இடமிருந்து காசை கறந்தே தீர்வது என்பதில் முடிவாக இருக்கிறது அரசு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+