சமீபத்தில் தான் நேபாளம் இந்தியாவுக்கு எதிராக ஒர் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்திய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு நேபாளத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நேபாள ரூபாயைப் போன்றே அங்கு இந்திய ரூபாயையும் சரளமாக பயன்படுத்தும் நேபாளிகள் அங்கு அதிகம். ஒரு இந்திய ரூபாய் என்பது 1.59 நேபாள ரூபாய்க்குச் சமம்.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியைப் போல நேபாளத்தின் மத்திய வங்கியான நேபாள் ராஷ்டிர வங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்திய ரூபாய் நோட்டுக்களுக்கான தடை சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நமக்கு வந்து சேரத் தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
அந்த சுற்றறிக்கைப் படி, இனி நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 100 ரூபாய்க்கு மேல் அதிக மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களான 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது. 100 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் உள்ள இந்திய ரூபாய் நோட்டுக்கள் வழக்கம் போல பயன்படுத்தலாம். இந்த தடை நேபாள தேசத்தவர்களுக்கும் பொருந்தும்.
இப்போது மீண்டும் இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் ஒரு அதிரடி காட்டி இருக்கிறது நேபாளம். எதில் தெரியுமா..?
தொழிலாளர்கள்
இதுவரை ஏதோ பக்கத்தூருக்கு சுற்றுலா செல்வது போல இந்தியர்கள் பயணித்துக் கொண்டிருந்த நேபாளத்தில் இந்திய தொழிலாளர்கள் நேபாளத்தில் வேலை செய்ய இனி முறையான தொழிலாளர் உரிமங்கள் வேண்டுமெனச் சொல்லி இருக்கிறது.
ஏன்
நேபாள தொழிற்துறையில் உண்மையாகவே எத்தனை இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். யாரால் நேபாளப் பொருளாதாரம் ஓடுகிறது என்கிற விஷயங்கள் தெரிய வர வேண்டும் என்பதால் தான் இந்த நடவடிக்கைகளாம்.
சோதனை செய்வோம்
நேபாள தொழிலாளர் துறை ஒவ்வொரு கடை, தொழிற்சாலைகளாகச் சென்று சோதனையிட்டு வர இருக்கிறார்களாம். அப்படி சோதனைச் செய்யும் போது முறையான பணியாளர் உரிமம் இருந்தால் மட்டுமே நேபாளத்தில் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்களாம். இல்லை என்றால் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார்களாம்.
இதுவரை
இந்த அறிவிப்பு வெளியாகும் முன் வரை இந்தியா மற்றும் நேபாள அரசுகளுக்கு இடையிலான சில சிறப்ப் ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கோ அல்லது நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கோ பணீயாளர்கள் தாராளமாக பயணிக்கலாமென உறவு கொண்டாடிக் கொண்டிருந்தது நேபாளம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications