திட்டக்குழுவை மூடி விட்டு புதிய பெயரில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் அமைப்பாக கடந்த 2015-ல் தொடங்கப்பட்டது தான் நிதி ஆயோக். ஜிடிபி தரவுகளை மாற்றியதில் இருந்து இந்தியா முழுமைக்கு பேசு பொருளாகி விட்டது. இப்போது சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு தரவுகள் எல்லாம் மகுடத்தில் பதித்த முத்துக்கள் தான்.
முன்னாள் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர், நிதி செயலர், நிதி கமிஷன் அமைப்பின் தலைவர் விஜய் கேல்கர் ஒரு புதிய அதிகாரத்தை நிதி ஆயோக் அமைப்புக்கு வழங்கச் சொல்லி கேட்டிருக்கிறார்.
மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் மேம்பாட்டுச் செலவுகளை (Development Expenditure) ஒதுக்கும் வேலையை, அதிகாரத்தை நிதி ஆயோக்குக்கு தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். இதனால் பிராந்திய அளவில் நிலவும் சமமற்ற தன்மையை இது சரி செய்ய உதவுமாம். அதோடு கூட்டுறவு மற்றும் போட்டி போட்டு முன்னேறும் கூட்டாட்சித் தத்துவமும் வளரும் எனச் சொல்லி இருக்கிறார் விஜய் கேல்கர்.
Finance commission
இந்த அதிகாரத்தைத் தரச் சொல்லி நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் 15-வது நிதி கமிஷனோடு பேச இருக்கிறாராம். சுருக்கமாக முன்பு திட்டக் குழுவுக்கு இருந்தது போல சில நிதி சார்ந்த அதிகாரங்கள் நிதி ஆயோக் அமைப்புக்கும் வேண்டும் எனக் கேட்க இருக்கிறார்கள்.
Infrastructure
இந்தியாவில் இன்னும் பல்வேறு மாநிலங்களுக்கு சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவைகளை எல்லாம் சரி செய்ய இந்த அதிகாரம் உதவும். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் மேம்பாட்டுச் செலவுகளை (Development Expenditure) நிதி ஆயோக் மூலம் ஒதுக்கினால் இந்த சமமற்ற தன்மையை சரி செய்யலாம். அதிகம் முன்னேறி இருக்கும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து முன்னேறாத மாநிலங்களுக்கு நிதியை திருப்பி விடுவதன் மூலம் இந்த சமமற்ற தன்மை சரி செய்யப்பட வேண்டும்.
Not for Tamilnadu
ஆம். நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமாரும் அதைத் தான் சுற்றி வளைத்துச் சொல்கிறார். தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் மேம்பாட்டுச் செலவு நிதிகளை (Development Expenditure) நிதியை குறைத்து அஸ்ஸாம், பீகார், உத்திரப் பிரதேச போன்ற முன்னேறாத மாநிலங்களுக்க்கு ஒதுக்க இருக்கிறார்கள்.
Planning commission
இந்தியா சோஷியலிச காலத்தில் இருந்த போது கொண்டு வரப்பட்ட திட்டக் குழு கூட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வரும். ஆனால் நிதி அதிகாரம் நிதி அமைச்சகத்திடம் தான் இருந்தது. திட்டத்தைக் கொண்டு வருவது மத்திய அரசானாலும் நிதியை மத்திய நிதி அமைச்சகம் தான் ஒதுக்கும். ஆனால் இப்போது நிதி ஆயோக் திட்டக் குழுவைத் தாண்டி நிதி அதிகாரம் பெற மாநில அரசுகளுக்கு ஒரு கடிவாளம் போட முயல்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications