Quadriga CX என்கிற நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கெரால்டு காட்டன் இறந்து விட்டார். இந்த Quadriga CX என்கிற நிறுவனம் பல்வேறு முதலீட்டாளர்களின் பணத்தை க்ரிப்டோ கரன்ஸிகளில் முதலீடு செய்திருக்கிறது.
அப்படி முதலீடு செய்யும் போதும் க்ரிப்டோகரன்ஸிகளை விற்று பணமாக மாற்றும் போது பாஸ்வேர்டுகளைப் போட வேண்டும். அந்த பாஸ்வேர்டுகள் நம் கெரால்டு காட்டனுக்கு மட்டும் தான் தெரியும்.
அந்த ரகசிய பாஸ்வேர்டுகள், நம் Quadriga CX நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி இறந்ததோடு போய்விட்டது. அவர் வீடு, அலுவலகம் என அனைத்து இடங்கள் அலசிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை

Twist
ஆனால் கெரால்டு காட்டன் இறப்பதற்கு முன், சரியாக இறப்பதற்கு 12 நாட்களுக்கு முன் கெரால்டு காட்டன் தன் உயிலை எழுதி வைத்து விட்டுச் சென்று இருக்கிறார். அந்த உயிலின் படி Quadriga CX நிறுவனத்தின் மொத்த உரிமையாளராக, முதன்மை அதிகாரியாக தனக்குப் பிறகு தன் மனைவி ராபர்சன்னை நியமித்திருக்கிறார்.

Happy
இந்த Quadriga CX நிறுவனத்தின் சுமார் 3,63,000 பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் 92,000 பேர் தங்கள் பணத்தை க்ரிப்டோகரன்ஸிகளாக முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த 92,000 பேருக்கு வந்து சேர வேண்டிய க்ரிப்டோகரன்ஸிக்களின் தொகை மட்டும் சுமார் 150 மில்லியன் டாலர். இந்திய ரூபாயின் 1020 கோடி ரூபாயாம். இதுவரை காட்டனின் கணிணி மற்றும் சொல்போன்களை ஹேக் செய்ய முடியாமலும் தவித்த வந்தார்கள். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் ஒரு படி மேலே போய் நீதிமன்றத்தில் வழக்கே தொடுத்துவிட்டார்களாம். இந்த நிறுவனத்தின் முதலீடு செய்திருக்கு கடன்காரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கனடா நீதிமன்றமே கூட ஒப்புக் கொண்டு விட்டதாம். இதெல்லாம் நடந்த பின் தான் இந்த உயில் கிடைத்திருக்கிறது,

தெளிவான உயில்
தன்னுடைய முதல் வீடு, தன் பண்ணை வீடு, தன் தனி சொகுசு விமானம், 2017-ல் ஆசையாக வாங்கிய லெக்ஸெஸ் நிறுவன கார், ஒரு குடும்பம் மட்டும் வாழும் அளவுக்கான சொகுசுக் கப்பல், தன் விலை உயர்ந்த செல்ல நாய் குட்டிகளான chihuahuas, Nitro, Gully என அனைத்து சொத்துக்களுக்கும் உரிமையாளராக தன் மனைவி ஜென்னிஃபர் ராபர்ட்சன்னையே தேர்வு செய்திருக்கிறாராம் கெரால்டு. பாசக்கார மனிதர்.

இந்தியாவில் தான் இறப்பு
ராஜஸ்தான் மாநிலத்தி உள்ள சுற்றுலா நகரமான ஜெய்ப்பூருக்குத் தான் கெரால்டு காட்டன் மற்றும் அவரது மனைவி ஜென்னிப்பர் ராபர்ட்சன்னும் வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்க நோயின் (Crohn's disease) தீவிரம் காரனமாக் இறந்துவிட்டாராம். அதற்கு இந்திய உணவுகளும், அதில் சேர்க்கப்பட்டிருந்த அதிகபப்டியான மசலா ஐட்டங்களும் தான் காரணம் என நீதிமன்றத்திலேயே புகார் சொல்லி இருக்கிறாராம் ராபர்ட்சன். ஒருவேளை காட்டனின் உயில் கிடைத்திருக்காவிட்டால் இந்திய உணவுகள் மீது சட்டப்படி வழக்கே தொடுத்திருப்பார் போலிருக்கிறது.