பணக்காரர்களின் டெபாசிட்களுக்கு அதிக வட்டியா..? கடுப்பில் மூத்த குடிமக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

117 லட்சம் கோடி ரூபாய். வங்கியில் பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் என வங்கிகளில் டெபாசிட்டுகளாக இருக்கும் பணத்தின் அளவு.

 

அதில் நடப்புக் கணக்கில் 11.34 லட்சம் கோடி ரூபாயும், சேமிப்பு கணக்குகளில் 37.56 லட்சம் கோடி ரூபாயும், டெர்ம் டெபாசிட்டுகளில் 68.10 லட்சம் கோடி ரூபாயும் இருக்கிறது.

மகாராஷ்டிரா, தில்லி, உத்திரப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழகம், குஜராத், கேரளா ஆகிய மாநிலங்கள் தான் இந்த 117 லட்சம் கோடியில் 77.60 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட்களாக வைத்திருக்கிறார்களாம். இது எல்லாமே மார்ச் 2018 நிலவரம்.

பல்க் டெபாசிட்?

பல்க் டெபாசிட்?

மத்திய ரிசர்வ் வக்கியின் அறிவுரைகள் படி பல்க் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்களை வங்கிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். இப்போது வரை ஒரு கோடி ரூபாய் தான் பல்க் டெபாசிட்டுகளாக இருக்கின்றன. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரும் டெபாசிட்டுகளுக்கு 0.1 முதல் 0.9 சதவிகிதம் வரை கூட வங்கிகள் வட்டியை நிர்ணயிக்கிறார்களாம்.

இனி 2 கோடி

இனி 2 கோடி

இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் வந்த டெபாசிட்டுகள் பல்க் டெபாசிட்டுகளாக கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் தான் இனி பல்க் டெபாசிட்டுகளாக கருதப்படௌம் என ஆர்பிஐ சொல்லி இருப்பது மேல் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

என்ன பிரச்னை?
 

என்ன பிரச்னை?

இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யும் நபர்கள் தில்லாக வங்கியிடம் கூடுதல் வட்டி கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். ஆனால் இனி இரண்டு கோடிக்கு மேல் பணம் போடுவதாக இருந்தால் தான் இனி வங்கிகளே வட்டி விகிதங்களை அதிகரித்தோ குறைத்தோ கொடுக்க முடியும்.

பென்ஷனர்கள்

பென்ஷனர்கள்

அரசு வேலைகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், வீடு, பூர்வீகச் சொத்து போன்றவைகளை விற்றவர்களுக்குக் வரி எல்லாம் செலுத்திய பின் வயதானவர்கள் தேர்ந்தெடுக்கும் முக்கியமான வருவாய் முறை வங்கி டெபாசிட்டுகள் தான். இப்போது அதில் கூட மாற்றம் ஒண்டு வந்தது வருத்தமளிப்பதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi deposits ஆர்பிஐ
English summary

reserve bank of India revised its bulk deposit limit to 2 crores

reserve bank of india revised its bulk deposit limit to 2 crores, it may hit the upper middle class depositors
Story first published: Thursday, February 7, 2019, 15:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X