சொன்னேனே கேட்டீங்களா..? கதறும் குமாரமங்களம் பிர்லா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக வளம் வரும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் டிசம்பர் 2018 காலாண்டில் 5004.60 கோடி ரூபாய் நிகர நஷ்டமாக கணக்குகட்டி இருக்கிறது.

 

இதற்கு முந்தைய செப்டம்பர் 2018 காலாண்டிலும் 4,973 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியது. இந்த செப்டம்பர் 2018 தான் வோடாஃபோன் ஐடியா நிறுவன இணைப்புக்குப் பின் வந்த முதல் காலாண்டு. ஆக இந்த இணைப்புக்குப் பின்னும் நிறுவனம் இரண்டு காலாண்டுகளாக எழுந்திரிக்கவே இல்லை.

இந்த நிறுவனத்துக்கான கடன் தொகையாக 1.14 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறதாம். இதில் அரசுக்கு அலைக்கற்றை கட்டணமாக செலுத்த வேண்டிய 91,000 கோடி நிலுவைத் தொகையும் அடக்கமாம்.

கோரிக்கை

கோரிக்கை

மேலே சொன்ன 91,000 கோடி ரூபாயை வரும் மார்ச் 2019-ல் இந்திய டெலிகாம் துறைக்கு செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களை ரத்து செய்யச் சொல்லி இண்திய டெலிகாம் துறையின் செயலர் அருணா சுந்தரராஜனைச் சந்தித்து பேசி இருக்கிறார். அதோடு ஜியோ இந்திய டெலிகாம் சந்தையோடு இணையாத ரீதியிலேயே செயல்பட்டு வருகிறது. அவர்கள் செய்த அதிரடி நடவடிக்கைகளால் தான் இன்று நாங்கள் உங்களிடம் எங்கள் தவணைகளை ரத்து செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறோம் எனவும் நேரடியாக பேசியவர்.

வருவாய்

வருவாய்

டிசம்பர் 2018 காலாண்டு முடிவுகள் படி வோடாஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு 11,982 கோடி ரூபாய் மொத்த வருவாயாக ஈட்டி இருக்கிறது. இது செப்டம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய 7,878 கோடி ரூபாயை விட 52 சதவிகிதம் அதிகமாம்.

நிதிப் பற்றாக்குறை
 

நிதிப் பற்றாக்குறை

கையில் போதுமான நிதி இல்லாததால், 25,000 கோடி ரூபாயை Rights Issue முறையில் பங்குகளை விற்று பணத்தைத் திரட்ட இருக்கிறார்களாம். அதற்கும் இயக்குநர் குழுவிடமிருந்து அனுமதி வாங்கிவிட்டார்களாம்.

திட்டம்

திட்டம்

"எங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டே மேலும் முன்னேற இன்னும் தரமான நெட்வொர்க் சேவைகளையும், 4ஜி இணிஅய சேவைகளையும் தர இருக்கிறோம். மேலே சொன்ன படி 25000 கோடி ரூபாய் நிதி வரும் பட்சத்தில் எங்கள் நிதி நிலை வலுவடைந்து பிசினஸும் வளரத் தொடங்கும்" என்கிறார்கள் வோடாஃபோன் ஐடியா அதிகாரிகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea quarterly results show 5000 crore loss

vodafone idea quarterly results show 5000 crore loss
Story first published: Thursday, February 7, 2019, 17:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X