Tamil Nadu Budget 2019: 8-ஆவது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: தமிழக பட்ஜெட்டை 8-ஆவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா காலத்திலிருந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர் 8-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்ட நிலையில் நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் அதே ஆண்டு ஆகஸ்டில் இரு அணிகளும் ஒன்றிணைந்தது. இதையடுத்து நிதியமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகள் ஓ.பன்னீர் செல்வம் வசம் வந்தது.
ஓ.பி.எஸ் துணை முதல்வராகி தற்போது 2-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications