சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம்... ரூ.100 கோடி கூடுதலாக ஒதுக்கீடு
சென்னை: 2019 - 20 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 8 வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு : தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும் என்றார்.

மேலும், தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது என்றும் கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்த நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்புகளை கேட்டு அதிமுக உறுப்பினர்கள் மேசைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.


Click it and Unblock the Notifications