நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

சென்னை: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அதில், தமிழகத்தில் 1, 986 கி.மீ தொலைவில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

உலக வங்கி நிதி உதவியுடன், 2 வது கட்ட திட்டப் பணிகள் 1,171 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது என்றும்
தமிழக சாலை மேம்பாட்டிற்காக 459.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் சென்னை சுற்றுவட்ட சாலைக்கு, கடன் உதவி பெற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருதாகவும் இந்த திட்டம் சென்னை சுற்றுவட்ட சாலை தரத்தை மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

2019 - 20 ஆம் ஆண்டில் 206 ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், நபார்ட் வங்கி உதவியின் கீழ் 299.60 கோடி ரூபாய் செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+