Tamil Nadu Budget 2019: கஜா புயல்.. 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டம்.. ரூ. 1700 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 1 லட்சம் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றி வருகிறார். அவர் கூறுகையில் சென்னையில் ரூ. 2000 கோடி செலவில் மல்டி பார்க்கிங் கட்டிடம் அமைக்கப்படும்.

2 லட்சம் கார்கள், 4 லட்சம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது.
ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.


Click it and Unblock the Notifications