சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2019- 20ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் இன்று 8 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் தாக்கல் செய்யும் 2 வது பட்ஜெட் இதுவாகும்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14 வது இடத்தில் உள்ளது என்றும், இந்த பட்டியலில் தமிழை 10 வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளதாகவும், பிற சர்வதேச பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications