சென்னை: 2019 - 20 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று 8 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதன்படி, வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் செலவினங்கள் ரூ. 2,08,671 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பற்றாக்குறை ரூ. 44,176 கோடியாக இருக்கும் வரி வருவாய் ரூ 1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* சமூக பாதுகாப்பு உதவிதொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ3,958 கோடி நிதி
* புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு 100 கோடி நிதி
* நடப்பாண்டில் வரி வருவாய் 14% அதிகரிக்கும் என தகவல்
* ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை
* புறம்போக்கு நிலங்களில் 5ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்
* வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு
* விரைவில் விபத்து காப்பீடு திட்டம் அறிமுக செய்யப்படும் இதற்காக ரூ.250 கோடி நிதி
* ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை
* விவசாயத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* நகராட்சிகளில் குடிநீர் திட்டத்திற்கு ரூ.18,700 கோடி
* சிறைச்சாலை துறைக்கு 319 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* மாற்று திறனாளிகளுக்கு இந்தாண்டு 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்


Click it and Unblock the Notifications