ஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வரும் போதே பல்வேறு மாநிலங்களும் தனக்கான வருவாய் அடிபடும் என்கிற பிரச்னையை கையில் எடுத்தது. அதை சமாளிக்க மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.
அதன் படி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வருவாய் நஷ்ட ஈட்டுத் தொகை கொடுக்க முன்வந்தது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விலை வாசி அதிகரிக்கிறது. அதோடு மத்திய அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும் போது மாநிலங்களுக்கு மட்டும் அதே நஷ்ட ஈடா என்கிற கேள்வியும் எழுந்தது.
அதற்குத் தான் ஒவ்வொரு ஆண்டும் முந்தையா அண்டில் கொடுக்கப்பட்ட நஷ்ட ஈட்டில் 14 சதவிகித தொகையை கூட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டது மத்திய அரசு. அதன் பின் தான் போர் கொடி தூக்கிக் கொண்டிருந்த மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு சம்மதம் சொன்னது.
மத்திய அரசின் வாக்குறுதிப் படி சரக்கு மற்றும் சேவை வரிகள் அமல்படுத்தப்பட்ட 2017 - 18 நிதி ஆண்டில் தமிழகத்துக்கு 31,283 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கொடுத்தது. அதே போல் 2018 - 19-ல் தான் ஒரு முழு ஆண்டுக்கு ஜிஎஸ்டி அமல் ஆகிறது என்பதால் வரும் மொத்த வருவாய்கான பங்கு போக 14% அதிகரித்தும் வழங்கியது மத்திய அரசு.
இந்த 31,283 கோடியில் குறைந்த பட்சம் 14 சதவிகிதம் கூட்டிக் கொடுக்கும் என ஜிஎஸ்டி கவுன்சில் சொன்ன வாக்குறுதிகள் படியே தமிழக பட்ஜெட்டு தரவுகளிலும் சுமார் 52,000 கோடி ரூபாயை கணக்கு சொல்லி இருந்தது.
அதை வைத்துத் தான் ஓபிஎஸ் வரும் 2019 - 20-ம் ஆண்டில் எங்களுக்கு 14% வருவாய் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார். ஆக தமிழக அரசிடம் தன் வருவாயை அதிகரித்து அரசை நிதிப் பற்றாக்குறை இல்லாத அரசாக மாற்றும் எண்ணமோ, அதற்கான திட்டங்களோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இடஹி நிரூபிக்கும் மற்றொரு விஷயம் தமிழக அரசுக்கான பட்ஜெட்டில் எந்த ஒரு வரி விகித கூட்டல்களோ அல்லது விலை வாசி உயர்த்துவது பற்றிய விஷயங்களோ அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications