தமிழகம் வருவாய்ப் பற்றாக்குறை..! ஆர்பிஐ என்ன சொல்கிறது..?
இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் பட்ஜெட் மதிப்பீடுகள் மற்றும் கணக்கீடுகளைப் பயன்படுத்தி மத்திய ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வருவாய்ப் பற்றாக்குறை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது
அதன் படி இந்தியாவிலேயே அதிக வருவாய்ப் பற்றாக்குறையில் தமிழகமும் முன்னனியில் இருப்பதைக் கணித்துச் சொல்லி இருக்கிறது.

2018 - 19 நிதி ஆண்டுக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் வருவாய்ப்பற்றாக்குறை தமிழகத்தின் மொத்த மாநில ஜிடிபியில் ஒரு சதவிகிதமாகவும், நிதிப் பற்றாக்குறை தமிழகத்தின் மொத்த ஜிடிபிய்ல் 2.8 சதவிகிதமாகவும் இருக்கிறதாம்.
பஞ்சாப் 2.5%, ஹிமாச்சலப் பிரதேசம் 2.1%, ராஜஸ்தான் 1.9%, கேரளா 1.7% ஆகிய நான்கு மாநிலங்களின் வருவாய்ப் பற்றாக் குறைக்குப் பிறகு தமிழகம் தான் ஐந்தாவது இடத்தில் இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications