அரசுக்குத் தேவையான பணம் அரசிடம் இல்லாத போது, கடன் பத்திரங்களை வெளியிடும். அந்தக் கடன் பத்திரங்களை வாங்குபவர்கள் ஒரு பத்திரத்துக்கு இத்தனை ரூபாய் என பணம் கொடுப்பார்கள். அது தான் அரசுக்குக் கிடைக்கும் கடன் தொகை. அந்த கடன் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாக அரசு செலுத்தும். அதோடு அசல் தொகையையும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குப் பின் மொத்தமாக திருப்பித் தருவார்கள். இதற்குப் பெயர் தான் Market Borrowings.
தமிழக அரசு
இப்படி தமிழக அரசு சுமார் 40,700 கோடி ரூபாயைக் கடனாக வாங்கி இருக்கிறது. இந்த 40,700 கோடி ரூபாயில் 4.5 சதவிகிதக் கடனை மார்ச் 2019-க்குள்ளும், 9.8 சதவிகிதக் கடனை மார்ச் 2021-க்குள்ளும், 14.4 சதவிகிதக் கடன்களை மார்ச் 2023-ம் ஆண்டுக்குள்ளும், 20 சதவிகிதத் தொகயை மார்ச் 2025-ம் ஆண்டுக்குள்ளும் செலுத்த வேண்டி இருக்கிறது. இதானால் இனி வருங்காலங்களிலும் தமிழகத்துக்கு நிதி உபரியான பட்ஜெட் வருவது கடினம் தான்.
பிரச்னை
இதை எல்லாம் விட மார்ச் 2025 - 2026-ம் ஆண்டுக்கு மேல் இந்த 40,700 கோடி ரூபாயில் சுமார் 20,350 கோடி ரூபாயை செலுத்த வேண்டி இருக்கிறது. அப்போது அந்த அளவுக்கு மாநிலங்களின் வருவாயை சீர் செய்ய வேண்டும். முடியுமா..? எல்லாம் ஓபிஎஸ் கையில் தான் இருக்கிறது.
அந்த நான்கு பேர்
மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தான் இப்படி சந்தைக் கடன்களை (Market Borrowings) அதிகம் வாங்கி இருக்கிறார்கள். இந்த நான்கு மாநிலங்களுமே 2025 - 26 நிதி ஆண்டில் ஒரு பெரிய தொகையை கடந்தாரர்களுக்கு கொடுக்க வேண்டும்.
தயார் ஆகுங்கள்
ஆக இந்த நான்கு மாநிலங்களுக்கும் தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வாங்கிய கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாவார்கள் அதை சமாளிக்க இன்றில் இருந்தே கொஞ்சம் நிதியை ஒதுக்கி வைப்பது நல்லது என ஆர்பிஐ தன் கருத்தைச் சொல்லி இருக்கிறது.


Click it and Unblock the Notifications