1993 விலைக்குப் போன டாடா மோட்டார்ஸ்..? எத்தனை அடி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வழக்கம் போல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நட்டத்தைச் சொல்லி இருக்கிறது. ஜூன் 2018 முதல் தொடர்ந்து இது மூன்றாவது காலாண்டு முடிவும் நஷ்டத்தில் தான் இருப்பதாக நிதி நிலை அறிக்கைகள் சொல்கின்றன.

 

டிசம்பர் 2018 காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவ்னத்தின் நிகர நட்டம் 26,961 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 2017-ல் டாடா மோட்டார்ஸின் நிகர லாபம் 1,077 கோடியாக இருந்தது.

டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்களுக்கு செய்த முதலீடுகள் காரணமாகத் தான் நித நட்டம் என டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் காரணம் சொன்னாலும் இந்த நிகர நட்டத்துக்கான பதிலை பங்குச் சந்தையில் சொல்லிவிட்டார்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள். ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துக்கு சுமார் 3 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு முதலீடுகள் செய்திருக்கிறார்களாம்.

20 ரூபாய் நட்டம்

20 ரூபாய் நட்டம்

நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் 183 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த டாடா மோட்டார்ஸின் பங்கு விலை, இன்ரு காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே 163 ரூபாய்க்குத் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆக கேப் டவுனிலேயே 20 ரூபாய் நஷ்டத்தில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது.

இறக்கம் தொடக்கம்

இறக்கம் தொடக்கம்

நேற்று மாலையே டாடா மோட்டார்ஸ் நிறுவன முடிவுகள் வந்துவிட்டதால் இந்த பங்குகளில் முதலீட்டாளர்களோ, வர்த்தகர்களோ முதலீடு செய்ய விரும்பவில்லை. மாறாக ஷாட் எடுக்கத் தொடங்கினார்கள். அதிக நபர்கள் இந்த பங்கின் விலை இறங்கும் என ஷாட் எடுக்கத் தொடங்கியதால் பங்கின் விலையும் தொடர்ந்து சரிவக் காணத் தொடங்கியது.

தப்பித்தது விலை
 

தப்பித்தது விலை

இன்று பிப்ரவரி 08, 2019 மாலை வர்த்தகம் முடிவடையும் போது 150.70 ரூபாய்க்கு விலை சரிவு நின்றிருக்கிறது. ஆனால் வர்த்தக நேரத்தில் 129 ரூபாய் வரை சரிந்திருக்கிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பங்கை வெளியிட்டு 1993-ல் இருந்த விலை. அந்த விலையைத் தான் இன்று இங்கு தொட்டிருக்கிறது.

என்ன ஆகும்

என்ன ஆகும்

சரி இந்த சரிவு அடுத்து வரும் நாட்களில் சரிகட்டப்படுமா..? எனக் கேட்டால் இல்லை என்கிறார்கள், பங்குச் சந்தை வல்லுநர்கள். இந்தியாவின் கார் சந்தைகளில் டாடா மோட்டார்ஸ் இப்போது தான்வளர்ந்து வருகிறது. இது மாருதி சுஸிகி மற்றும் ஹியூண்டாய் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளுவது எல்லாம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடக்காத காரியம். ஆக என்ன செய்தாலும் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 180 ரூபாயைத் தாண்டுவது சிரமம் என்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

tata motors share price fell to 1993 price due to 26000 crore loss in last quarter

tata motors share fell to 1993 price due to 26000 crore loss in last quarter
Story first published: Friday, February 8, 2019, 17:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X