தமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடாமல் ஒரேஅடியாக தமிழகத்தை மட்டும் குறை சொன்னால் எப்படி..?
வாருங்கள் எந்த மாநிலங்கள் எல்லாம் நம்மை விட கூடுதலாக கடன் வாக்கி இருக்கிறார்கள், யார் நம்மை விட குறைவாக வாங்கி இருக்கிறார்கள் எனப் பார்ப்போம்

இந்தியாவின் மொத்த 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் டெரிட்டரிகளில் 6.30 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி முதலிடத்தில் இருக்கிறது ராஜஸ்தான். மத்திய அரசு அதிகப்படியாக 1,200 கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பதும் அதே ராஜஸ்தான் மாநிலத்துக்கு மட்டும் தான்.
ராஜஸ்தானைத் தொடர்ந்து உத்திரப் பிரதேசம் 5.84 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். தமிழகம் 3.27 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மகாராஷ்ட்ரிஅம் தன்னுடைய 2.83 லட்சம் கோடியையும் கடன் பத்திரங்கள் மூலம் அம்ட்டுமே வெளியிட்டு காசு பாத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் மீதமிருந்த கடன்களைக் கூட கடன் பத்திரங்கள் மூலம் அடைத்திருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தைப் போல மமதா பேனர்ஜியின் மேற்கு வங்கம் தனக்கு இருக்கும் 2.08 லட்ச ரூபாய் மொத்தக் கடனில் 99.7 சதவிகிதக் கடன்களை கடன் பத்திரங்கள் மூலம் மட்டுமே திரட்டி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications