தமிழகம் மாநிஅல் மேம்பாட்டுக் கடன், மாநிலப் பொதுக் கடன், தமிழக உதய் திட்டக் கடன் என பல்வேறு பெயர்களில் பொது மக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 2,05,700 கோடி ரூபாயை கடனாக வாங்கி இருக்கிறார்கள்.
இந்த கடன் தொகைகளை மார்ச் 2018 தொடங்கி மார் 2037 வரை பல்வேறு தவனைகளாக திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த வருடமே அரசுக்கு நிதி போதாமல் சுமார் 43,000 கோடி ரூபாயை கடனாக வாங்கி இருப்பதை பட்ஜெட் படிக்கும் போதே சொல்லிவிட்டார் தமிழக நிதி அமைச்சர் பன்னீர் செல்வம்.

இப்போது மார்ச் 2018-ல் 4,900 கோடி ரூபாய் எனத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 10,000 கோடி முதல் 15,000 கோடி ரூபாயை கடன் பத்திரங்கள் வாங்கியவர்களூக்கு திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதுவும் வட்டியோடு.
2022 - 2025 நிதி ஆண்டுகளில் இந்த கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பாரம் 20,200 கோடி ரூபாயில் இருந்து 26,600 கோடி ரூபாயாக அதிகரிக்கிறது. அதன் பின் 2025 - 2026 வரையான காலங்களில் இந்த சுமை சுமார் 40,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கிறது. இப்போதே 43,000 கோடி ரூபாய் கடன் வாங்கி அரசை ஓட்டிக் கொண்டிருக்கும் தமிழக அரசு எப்படி 2025 - 2026 காலங்களில் கடனே வாங்காமல் 40,000 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தும்.
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் இனி மாநிஅல் அரசுகளுக்கு எந்த பெரிய வருவாயும் இருக்காது. மாநில அரசு புதிதாக வரி விதிக்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசின் அனுமதி வேண்டும். ஆக மிகப் பெரிய சவாலைத் தான் தமிழகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர் கொள்ள இருக்கிறது என நிதி மற்றும் பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications