2019 ஜனவரி மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Inflation) இன்று பிப்ரவரி 12, 2019 மாலை வெளியாகி இருக்கிறது. நுகர்வோர் பணவீக்கம் 2.05 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் நுகர்வோர் பணவீக்கம் 2.19 சதவிகிதமாக இருந்திருக்கிறது. ஜனவரி 2018 காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 5.07 சதவிகிதமாக இருந்திருக்கிறது.

நுகர்வோர் உணவுக் பணவீக்கம் ஜனவரி 2019 காலத்துக்கு -2.17 சதவிகிதம் என கடந்த டிசம்பர் 2018 காலத்தில் இருந்த -2.65 அளவை விட கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. ஜனவரி 2018 காலத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 4.70 சதவிகிதமாக இருந்திருக்கிறது.
இந்திய தொழிற்துறை உற்பத்தியோ டிசம்பர் 2018 காலத்தில் 2.4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. சுரங்கத் துறை -1.0%, உற்பத்தித் துறை 2.7%, மின்சாரம்த் துறை 4.4%, ஒட்டு மொத்தத்தில் 2.4%, முதன்மைப் பொருட்கள் -1.2%, மூலதனப் பொருட்கள் 5.9%, இடைநிலைப் பொருட்கள் -1.5%, கட்டுமானத் துறை பொருட்கள் 10.1% என தொழிற்துறை உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
சமீபத்தில் தான் ஆர்பிஐ இந்திய வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டித் தொகையை 0.25 சதவிகிதம் குறைத்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பணவீக்கம் கட்டுபாட்டில் இருப்பதோடு, இந்திய தொழிற்துறையும் அதிகரித்திருப்பது கவனிக்கத் தக்கது.


Click it and Unblock the Notifications