இந்தியாவில் கிட்டத்தட்ட 98 சதவீத மக்களுக்குத் தற்போது இண்டர்நெட் கை எட்டும் தூரத்தில் இருக்கும் காரணத்தால் கோடான கோடி இந்திய வாடிக்கையாளர்களை இணையம் வாயிலாகச் சென்று அடைவது என்பது மிகவும் எளிதான ஒரு செயல்.

இப்படியிருக்கும் போதும் நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமான ஐடிசி நிறுவனம் ஈகாமர்ஸ் துறையில் ஏன் இறங்கக் கூடாது. ஆம் நாட்டின் முன்னணி FMGC நிறுவனம் ஈகாமர்ஸ் துறையில் itcstore.in என்ற புதிய முகவரியுடன் இறங்கியுள்ளது. இது சோதனை ஒட்டமாக இருந்தாலும் முக்கிய வர்த்தக இலக்காகக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளது ஐடிசி.
ஈகாமர்ஸ் துறையில் இறங்கும் முயற்சி மிகவும் தாமதமான ஒன்றாக இருந்தாலும் மத்திய அரசு ஈகாமர்ஸ் துறையின் மீது விதித்த கட்டுப்பாடுகளுக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது கவணிக்க வேண்ட ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஈகாமர்ஸ் துறையில் இறங்கியுள்ளது.
ஐடிசி நிறுவனம் பல நூறு பொருட்களை விற்பனை செய்தாலும் இப்புதிய ஈகாமர்ஸ் தளத்தில் தற்போது ஐடிசி Fabelle என்ற ஆடம்பர சாக்லேட் பிராண்டை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. மேலும் ஐடிசி-யின் ஈகாமர்ஸ் சேவை நாட்டின் மெட்ரோ நகரங்களை மையப்படுத்தி மட்டுமே இயங்க உள்ளது. Fabelle பிராண்டை தொடர்ந்து இத்தளத்தில் ஐடிசி நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் FMCG பிரிவில் தொடர்ந்து ஐடிசி முதல் இடத்திலேயே இருக்க முயற்சித்து வருகிறது. இது பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிய பாதிப்பாக இருக்கும் என இத்துறை வர்த்தக வல்லுனர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications