பங்குச்சந்தையில் இவர்கள் தான் என்னுடைய 'குரு'.. மனம்திறந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இவர் எங்கு முதலீடு செய்கிறார், எவ்வளவு முதலீடு செய்கிறார், எப்போதும் பங்குகளை விற்பனை செய்கிறார் என்று இந்தியாவில் மட்டும் உலக நாடுகளிலும் ஒரு மாபெரும் கூட்டம் இவரைப் பின்தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்டவருக்கு யார் குருவாக இருக்க முடியும்.

 

பங்குச்சந்தையில் 'இவர்கள்' தான் என்னுடைய 'குரு'.. மனம்திறந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..!

வில்லவனுக்கு வில்லவன் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி அவருடை குரு யாரென்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறுகிறார். வாங்க யாரென்று பார்ப்போம்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

பங்குச்சந்தையை மட்டுமே முக்கிய வர்த்தகமாகக் கொண்டு சுமார் 30 வருடம் இந்திய சந்தையில் முதலீடு செய்து வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆரம்பக்காலத்தில் தானே முதலீடு செய்து சந்தைச் சரிவுகளிலும், உயர்வுகளிலும் பாடம் கற்றார் எனக் கூறப்பட்டாலும், தனக்குக் குருவாக 4 பேர் உள்ளதாக FIFA வருடாந்திர கூட்டத்தில் கூறியுள்ளார்.

டிமார்ட் சகோதரர்கள்

டிமார்ட் சகோதரர்கள்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ராதாகிஷன் தாமனி மற்றும் ரமேஷ் தாமனி ஆகியோரைத் தனது முதல் குரு-க்கள் ஆகக் கூறியுள்ளார்.

ராதாகிஷன் தாமனி
 

ராதாகிஷன் தாமனி

இந்திய பங்குச்சந்தைகளிலேயே மீடியாவை அதிகளவில் சந்திக்காத ஒரு முதலீட்டாளர் என்றால் அது ராதாகிஷன் தமனி-யாக மட்டுமே இருக்க முடியும்.

டிமார்ட் சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் தலைவர் தான் ராதாகிஷன் தாமனி இவர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரிய புலி, பங்குச்சந்தை வர்த்தகத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தான் டிமார்ட்-ஐ உருவாக்கினார். தற்போது 8 பில்லியன் டாலர் மதிப்பில் உலகின் 176வது பெரிய பணக்காரர் ஆகத் திகழ்கிறார்.

ரமேஷ் தாமனி

ரமேஷ் தாமனி

ராதாகிஷன் தாமனி-யின் சகோதரர் தான் ரமேஷ் தாமனி, இவர் 1989ஆம் ஆண்டில் இருக்கு இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறார். இவரை இந்திய பங்குச்சந்தையின் நவாப் என அழைக்கப்படுகிறார்.

இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை

கடந்த 30 வருடத்தில் இந்தியா பங்குச்சந்தையைக் கார்கில் முதல் பணமதிப்பிழப்பு வரையில் பல சம்பவங்கள் தாக்கி மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்திய சந்தை தொடர்ந்து வளர்ச்சியால் தான் உள்ளது என ரமேஷ் தாமனி கூறினார். இது நூற்றுக்கு நூறு உண்மை.

 இருவர்

இருவர்

இதுமட்டும் அல்லாமல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-விற்குக் கமலா காப்ராவும், இளம் வயதிலேயே இறந்துபோன தன் நண்பர் ராஜீவ் ஷா-வும் குருவாக இருந்தனர் என FIFA வருடாந்திர கூட்டத்தில் கூறினார்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

இன்றைய மதிப்பில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் மொத்த சொத்து மதிப்பு 2.8 பில்லியன் டாலர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

list of rakesh jhunjhunwalas teachers of the stock market in tamil

list of rakesh jhunjhunwalas teachers of the stock market in tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X