ஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் அளித்து ஊக்குவிக்க மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் www.psbloansin59minutes.com என்ற இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்து இதுவரை ரூ. 30 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்தில் கடன் பெற பதிவு செய்தவர்களில் 24000 பேர் புதியவர்கள். அவர்களுக்கு 6,400 கோடி வழங்கப்பட்டுள்ளது. 68000 பேர் அடிக்கடி கடன் பெற்றவர்கள் அவர்களுக்கு ரூ. 23,439 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைனில் விண்ணப்பித்தால் 59 நிமிடத்தில் கடன்: ரூ.30 ஆயிரம் கோடி வழங்கிய வங்கிகள்

 

ஆன்லைனில் கடன் பெற தேவையான ஆவணங்கள்:

• ஜிஎஸ்டி பதிவு கடவுச்சொல் விவரம்

• 3 வருட வருமானவரி பதிவு கடவுச்சொல் விவரம்

• 6 மாத வங்கி கணக்கின் விவரம் PDF-ல் அப்லோடு செய்யவேண்டும்

• உரிமையாளர்கள் இயக்குநர்/பங்கு தாரர்/உரிமையாளர் விவரங்கள் அளிக்கவேண்டும்

• இப்போது கடன் ஏதாவது இருந்தால் அதன் விவரம் அளிக்கவேண்டும்

• கே.ஒய்.சி. ஆதாரம் அளிக்கவேண்டும்

• புதிய கடன் பெறுவதற்கான தேவை விவரம் அளிக்கவேண்டும்

இதற்காக வருமானவரி, ஜிஎஸ்டி, வங்கி அறிக்கை போன்றவற்றைச் சரிபார்க்கச் சிறப்பு மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஜிஎஸ்டி எண், ஜிஎஸ்டி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளிக்கவேண்டும்.

வருமான வரி நிறுவனத்தின் பேரில் செலுத்தப்பட்ட கடந்த 3 வருடத்திற்கான வருமான வரி விவரங்கள், நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான ஆவணங்கள், வருமான வரி செலுத்துவதற்கான கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்கவேண்டும். வங்கி விவரங்கள் நடப்பு வங்கிக் கணக்கின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல், 6 மாத வங்கி அறிக்கை உள்ளிட்ட விவரங்களையும் பிடிஎப் கோப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமையாளர்கள் இயக்குநர்/பங்குதாரர் /உரிமையாளர் விவரங்கள்: அடிப்படை, தனிப்பட்ட, கேஒய்சி, கல்வி விவரங்கள் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்ற விவரங்களையும் அளிக்க வேண்டும். நீங்கள் எல்லா பதிவுகளையும் பதிந்த பின் உங்களுக்கு கடன் உத்தரவாதம் அல்லது கடன் நிராகரிப்பு செய்தி வரும். அந்தச் செய்தி Hyperlink reference valid என்றோ Error! Hyperlink reference not valid என்றோ உங்கள் மின்னஞ்சலுக்கு தகவல் வரும்.

இது உங்களுக்கு வங்கி கொடுக்கும் முதன்மை அனுமதி. பின் 15 தினங்களில் வங்கியை அணுகி கடன் பெறலாம். உங்களுக்கு எந்த விதமான சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிய www.psbloansin59minutes.com என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bank loan rbi கடன்
English summary

Banks provide loans worth Rs 30k crore since launch

Loans worth Rs 30,000 crore sanctioned to MSMEs via 59-minute portal, says report.Government sources told the paper that the centre is hopeful that the credit offtake will increase further as the banks are likely to transfer the 25 basis rate cut announced by the Reserve Bank of India in its February policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more