ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகத்தில் மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ள ஸ்விக்கி தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தத் திட்டமிட்டு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
ஏற்கனவே இந்தியாவின் பெரு நகரங்களில் இருக்கும் ஹோட்டல்களில் இருந்து உணவுகளை வீட்டு வாசலுக்கு டெலிவரி செய்யும் நிலையில், இதே தேவை மளிகை பொருட்கள், காய்கறிகள், குழந்தை பராமரிப்புப் பொருட்கள் ஆகியவையும் உள்ளூர் கடைகளில் இருந்து டோர்ஸ்டெப் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக ஸ்விக்கி நிறுவனம் முக்கியமான கடைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்விக்கி ஸ்டோர்ஸ்
இப்புதிய சேவையின் பெயர் ஸ்விக்கி ஸ்டோர்ஸ், இந்தச் சேவையை முதற்கட்டமாகப் பெங்களூரில் அறிமுகம் செய்ய உள்ளது. இப்புதிய வர்த்தகத்தின் மூலம் ஸ்விக்கி அலிபாபா முதலீட்டில் இயங்கும் பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் நேரடியாக மோத உள்ளது.
80 நகரங்கள்
ஸ்விக்கி தற்போது இந்தியாவில் சுமார் 80 நகரங்களில் உணவு டெலிவரி செய்து வரும் நிலையில், இப்புதிய சேவையை எளிதாக விரிவாக்கம் செய்ய முடியும். இதனால் அடுத்தச் சில மாதங்களிலேயே இந்நிறுவனத்தின் மதிப்பு இரட்டிப்பு ஆகவும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் ஸ்விக்கி ஸ்டோர்ஸ் சேவை தற்போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் ஸ்விக்கி செயலியிலேயே பெறலாம்.
போட்டி நிறுவனங்கள்
ஸ்விக்கியின் இப்புதிய வர்த்தக விரிவாக்கம் பிக்பேஸ்கட் மட்டும் அல்லாமல் டன்சோ, க்ரோபர்ஸ், அமேசான் ப்ரைம் நவ், பிளிப்கார்ட்-இன் சூப்பர்மார்ட் ஆகிய நிறுவனங்களையும் அதிகளவில் பாதிக்க உள்ளது.
சாதாரணக் காரியமில்லை
ஆனால் இப்பிரிவு வர்த்தகத்தில் வெற்றிபெறுவது என்பது சாதாரணக் காரியமில்லை, அமேசான், பிளிப்கார்ட் உட்படப் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில் ஸ்விக்கி இதை எப்படிக் கையாளப்போகிறது என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications