ஜீன்ஸ் பேண்டுகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இதில் எந்த உலக நாடுகளோ, ஏழை நாடுகளோ விதி விலக்கல்ல.
இந்த நிலையில், ஜீன்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் தனெக்கன ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் லெவி ஸ்டாரஸ் (Levis) சுமார் 35 வருடங்களுக்குப் பின் மீண்டும் நியூயார்க் பங்குச்சந்தைக்கு வருகிறது.
ஆம், அமெரிக்க பங்குச் சந்தை நெறியாளர்களிடம், தங்கள் நிறுவனத்தை, அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுக் கொள்ளபுதன்கிழமை ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாம்.
ஜீன்ஸ்
ப்ளூ ஜீன்ஸ்-ஐ அறிமுகம் செய்த உலகின் மிகப்பெரிய ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனமான லெவி ஸ்டாரஸ்-இன் ஆதிக்கம் கடந்த சில வருடங்களில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவனத்தின் ஜீன்ஸ் மிகவும் காஸ்ட்லி, சந்தையில் இதைவிடவும் குறைந்த விலையில் அதிகமான ஜீன்ஸ் இருக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
பாரம்பரியம்
145 வருடம் பழைமையான லெவி ஸ்டாரஸ் தற்போது பங்குச்சந்தையில் இறங்குவதன் மூலம் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. பங்குச்சந்தையில் இறங்கும் லெவி ஸ்டாரஸ் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் இறங்க உள்ளது.
பங்குச் சந்தை
ஆனால் லெவி ஸ்டாரஸ் நிறுவனத்தின் ஜப்பான் கிளை நிறுவனமான லெவி ஸ்டாரஸ் கே.கே டோக்கியோ பங்குச்சந்தையில் இருக்கும் நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனமும் பங்குச்சந்தையில் இறங்க உள்ளது.
வளர்ச்சி
சமீபத்தில் லெவி ஸ்டாரஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்நிறுவனத்தின் வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1.59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 2 வருடத்தில் நிறுவனத்தின் மொத்த கடன் பாதியாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
1971 -ம் ஆண்டு
1971ஆம் ஆண்டு லெவி ஸ்டாரஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுப் பொதுத்துறை நிறுவனமாக மாறிய நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனர் லெவி ஸ்டாரஸ் இதை 1984ஆம் ஆண்டு இதைத் தனியார் நிறுவனமாக மாற்றினார்.


Click it and Unblock the Notifications