இந்தியா ஏழை நாடாகவே பார்க்கப்பட்டால் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், சொல்லப்போனால் இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரமும், ஆன்லைன் வர்த்தகமும் அதிகமான நிலையில் இந்தக் காலகட்டத்தில் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே உள்ளது.

ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை செயலாளர் பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கையைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 2017-18ஆம் கணக்கீடு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கை அடிப்படையில் இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெறும் 61 பேர் மட்டும் தான் எனத் தெரிவித்துள்ளார்.
இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 38 சதவீதம் இதன் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்துள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது. மேலும் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த நிதித்துறை செயலாளர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறுகையில் விரையில் பணமதிப்பிழப்புக் காலத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட 6900 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதுமட்டும் அல்லாமல் வருமான வரித்துறை டிசம்பர் 2018 வரையில் சுமார் 2000 பினாமி பரிமாற்றங்களைக் கண்டுபிடித்துள்ளது, இதன் மீதும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஷிவ் பிரதாப் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications