இந்தியாவின் மாபெரும் வர்த்தகக் குழுமங்களில் ஒன்று டாடா. சாதாரண் மண் வெட்டி தொடங்கி மிகப் பெரிய மென் பொருள் வரை எல்லாம் இடத்திலும் டாடா நீக்கமற நிறைந்திருக்கிறது.
இன்று பல துறைகளில் இந்தியாவின் முகமாகவும் (டிசிஎஸ்), சில துறைகளில் (டாடா மோட்டார்ஸ்) சாதிக்கக் துடிக்கும் இளைஞனைப் போலவும் அதே மிடுக்கோடு நடைபோட்டு வருகிறது.
டாடா குழுமத்தில் சில வருடங்களுக்கு முன்பு தலைமை பொறுப்பில் இருந்த சைரஸ் மிஸ்திரிக்கும், டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்திற்கும் உரிமை போராட்டம் நடந்தது.
நியமனம்
இதன் பின் சில மாதங்களில் டாடா குழுமத்தின் தலைவராக அப்போதைய டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன்-ஐ டாடா குழுமத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
2 வருட நிர்வாகம்
என்.சந்திரசேகரன் தலைமை பொறுப்பை ஏற்ற நாள் முதல் இன்று வரையில் டாடா குழுமம் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே சென்று வருகிறது. பிப்ரவரி 21, 2017இல் சந்திரசேகரன் தலைவர் பதவியில் அமர்ந்த நிலையில் இந்த இடைப்பட்ட 2 வருட காலத்தில் டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீடு 21 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
28 நிறுவனங்கள்
டாடா குழுமத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும், பங்குச்சந்தையில் 28 நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளன. 2017இல் இந்த 28 நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு 8,47,175.55 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2 வருடத்தில் இதன் மதிப்பு 10,88,446.05 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டிசிஎஸ்
டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டில் 70 சதவீதம் பங்கு வகிப்பது டிசிஎஸ் நிறுவனம் தான், இந்நிறுவனம் இந்த 2 வருட காலத்தில் 39 சதவீதம் வளர்ச்சி அடைந்து 7.69 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
சந்திரசேகரன் நிர்வாகத்தில் டாடா குழுமத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த 2 வருடத்தில் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 59 சதவீதம் சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதே காலகட்டத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 81 சதவீதம் வளர்ச்சி அடைந்து 8.1 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உரிமைப் போர்
இந்தப் போராட்டத்தின் போது இருதரப்பும் வழக்கு மேல் வழக்குத் தொடுத்த நிலையில், வழக்கின் தீர்ப்பு குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்திற்குச் சாதகமாக அமைந்து. இதனால் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பை ஏற்றார்.


Click it and Unblock the Notifications