ஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது

ஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது. கடந்த 10 மாதங்களிலில்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த பணவீக்க குறியீடு 2.76 சதவிகிதமாக இருக்கிறது. எரிபொருள் விலை இறக்கம் மற்றும் உனவுப் பொருட்கள் விலை இறக்கம் காரணமாக இந்த மொத்த பணவீக்கக் குறியீடு குறைந்திருக்கிறதாம்.

ஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது

ஜனவரி 2018-ல் இந்த மொத்த பணவீக்கக் குறியீடு 3.02 சதவிகிதமாகவும், டிசம்பர் 2018-ல் 3.80 சதவிகிதமாகவும் இருந்தது. இந்த ஜனவரி 2019-ல் மொத்த பணவீக்கக் குறியீடு 2.76 சதவிகிதத்தில் இருப்பது போல், கடந்த மார்ச் 2018-ல் இந்தியாவின் மொத்த பணவீக்கக் குறியீடு 2.74 சதவிகிதத்தில் இருந்தது.

உணவுப் பொருட்களில் உருளைக் கிழங்கு, வெங்காயம், பழங்கள் மற்றும் பால் போன்ற பொருட்களின் விலை குறைந்ததும் இதற்கு காரணமாம். இரண்டு நாட்களுக்கு மும் வெளியான நுகர்வோர் பணவீக்கமும் குறைந்திருப்பது கவனிக்க வேண்டியது.

இந்தியாவின் இந்த இரண்டு பணவீக்கங்களும் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக் கொள்கை முடிவில் மேலும் வட்டியைக் குறைக்கும் என உலக அளவில் எதிர்பார்ப்புகள் கூடி இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+