கன்னியாகுமரி: ஜியோ நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ரிலையன்ஸ், ஜியோ நிறுவனங்களுக்கு அளித்து வரும் ஆதரவை பி.எஸ்.என்.எல். அரசு நிறுவனத்திற்கு வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனியார் மயமாக்களை கைவிட கோரியும், 4G அலைக்கற்றையை ஒதுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 18,19,20 ஆகிய 3 நாட்கள் பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் பொருளாளர் ஆர். ராஜன் கூறுகையில், ரிலையன்ஸ், ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவால் அந்த தனியார் நிறுவனங்கள் ஒரே வருடத்தில் 23, 916 கோடி ரூபாய் வருமானம் அடைந்து உள்ளது.
ஆனால், மத்திய அரசின் ஆதரவு இல்லாததால் பி.எஸ்.என்.எல். அரசு நிறுவனத்தின் வருமானம் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் போக்கை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 18,19,20 ஆகிய 3 நாட்கள் பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யபட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications