ஆர்பிஐ அமைப்பை மிரட்டும் இயக்குநர் குழுக் கூட்டம் இன்று..? அரசுக்கு கீழ் படியுமா அர்பிஐ..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் மீண்டும் நிதி அமைச்சர் பொருப்பை ஏற்றுக் கொண்ட அருண் ஜேட்லி இன்று மத்திய ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவைச் சந்தித்துப் பேச இருக்கிறார். உர்ஜித் படேல் இருந்த போது ஆர்பிஐ இயக்குநர் குழு கூட்டத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டதோ அதே அளவுக்கு இப்போது இந்த கூட்டத்துக்கும் வழங்கப்பட்டிருக்கிறதாம்.

பங்குச் சந்தை முதலீட்டாலர்கள், வர்த்தகர்கள், வெளிநாட்டு முதலீட்டாலர்கள், தேர்தல் விமர்சகர்கள், மீடியாக்கள் என பல தரப்பினரும் இந்த கூட்டத்தைப் பற்ரிய செய்திகளை கவனித்து வருகிறார்கள். இந்த சந்திப்பின் போது மத்திய அரசுக்கு வர வேண்டிய இடைக்கால ஈவுத் தொகை (Interim Dividend) மிக முக்கியமான விவாதப் பொருளாக இருக்கப் போகிறது.

ஆர்பிஐ அமைப்பை மிரட்டும் இயக்குநர் குழுக் கூட்டம் இன்று..? அரசுக்கு கீழ் படியுமா அர்பிஐ..?

உர்ஜித் படேல் காலத்திலேயே இடைக்கால ஈவுத் தொகையைத் தர முடியாது எனச் சொன்ன பின்னும் மத்திய அரசு இன்னும் விடாமல் தன் இடைக்கால ஈவுத் தொகைக்காக ஆர்பிஐ அமைப்பை விரட்டிக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டியது. இந்த முறை சுமார் 28,000 கோடி ரூபாயாவது அரசுக்கு ஆர்பிஐ மூலம் வரும் என மத்திய வருவாத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் முன்பொரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லி இருந்ததையும் இங்கு நினைவு கூற வேண்டும்.

அரசு திட்டங்களுக்குப் போதிய நிதி தேவைப்படுவதாலும், ரிசர்வ் வங்கியின் நிதிநிலை மற்றும், கையிருப்பு உள்ளிட்டவை இந்த நிதிஆண்டில் சிறப்பாக இருப்பதாலும், அரசு ரூ. 28 ஆயிரம் கோடியை டிவிடெண்டாகக் கேட்கிறது எனவும் பல்வேறு ஆளும் கட்சியினர் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்பிஐ அமைப்பை மிரட்டும் இயக்குநர் குழுக் கூட்டம் இன்று..? அரசுக்கு கீழ் படியுமா அர்பிஐ..?

ஈவுத் தொகை பிரச்னை போக, இடைக்கால பட்ஜெட், நிதி ஒதுக்கீடு தொடர்பான விஷயங்களும் சூடாக விவாதிக்க இருக்கிறார். குறித்தும் விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். எனவே, அவரால்இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது கூட வர முடியவில்லை. ஆனால் இப்போது ஆர்பிஐ கூட்டத்துக்கு கச்சிதமாக வந்திறங்கி இருக்கிறார் அருண் ஜெட்லி.

இதை எல்லாம் விட மத்திய அரசின் ஊழியர்களில் ஒருவராக, முன்னாள் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கக் கூடிய பொருளாதார விவகாரத் துறை செயலராக இருந்து மே 2017-ல் ஓய்வு பெற்றவர். ஒரு கட்டத்தில், உஜித் படேல் ராஜினாமாவுக்குப் பின் ஆளும் கட்சிக்கு சரியான ஆட்கள் கிடைக்காத போது, சக்த்ஹி காந்த தாஸே தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ், வரலாறு படித்தவர். இவர் பொருளாதாரத்தில் எந்த பட்டப் படிப்புகளையும் படிக்காதவர் என்பதைக் காரணம் காட்டி, பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reserve bank of india official board meeting today

reserve bank of india official board meeting today
Story first published: Monday, February 18, 2019, 11:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X