மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி உடல்நலம் குன்றிய காரணத்தால் அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார், சுமார் 1 மாத காலத்திற்கு அமெரிக்காவிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய காட்டாயம் இருந்த காரணத்தால் தற்காலிகமாக நிதியமைச்சர் பதவியில் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக இடைக்காலப் பட்ஜெட்டையும் பியூஷ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் தன் நிதியமைச்சர் பதவியை ஏற்றுப் பணிகளைத் துவங்கியுள்ளார். இதுகுறித்துக் கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப அருண் ஜேட்லி அவர்களுக்கு நிதி அமைச்சகமும், நிறுவன விவகாரத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின் மூலம் 38 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள சம்பவத்தைக் கண்டித்து நரேந்திர மோடி தலைமையில் நடந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்திலும் அருண் ஜேட்லி கலந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications