பாஜகவில் சேர்ந்த SUNNY LEONE..? ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது அரசியல் சீசன். கூட்டணி களேபரங்கள் ஒரு பக்கம் தகித்துக் கொண்டிருக்கும் போது, மறு பக்கம் பிரசார வேலைகள் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

 

2014-ல் மோடி டெக்னாலஜிகளை களம் இறக்கி, தேர்தல் பிரச்சாரங்களை சர்வதேச அளவுக்கு கார்ப்பரேட் ஒழுங்குத் தன்மையோடு கொண்டு சென்றுவிட்டார். இன்று அதன் தாக்கங்களைத் தான் மேலே தலைப்பில் சொல்லி இருக்கிறோம்.

ஆம். பாலிவுட் பிரபலங்கள் தேசிய அரசியல் கட்சிகளை ஆதரிக்க, கோப்ராபோஸ்ட் என்கிற அமைப்பு ஒரு ஆபரேஷனை நடத்தி இருக்கிறது. அந்த ஆபரேஷனின் பெயர் Operation Karaoke.

என்ன ஆபரேஷன்

என்ன ஆபரேஷன்

இந்தியாவின் பாலிவுட் பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஆதரித்து பதிவிட வேண்டும். அப்படி பிரபலங்கள் பதிவிடுவதற்கு தகுந்தாற் போல காசு கொடுப்பார்கள். இதற்கு 44 பேரை தேர்ந்தெடுத்து விசாரித்திருக்கிறார்கள். அதில் 40 பேர் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்கள். நான்கு பேர் மட்டும் "மன்னிக்கவும் எங்கள் அரசியல் கருத்து விற்பனைக்கு அல்ல" என கறார் காட்டி இருக்கிறார்கள்.

அந்த 40 பேர்

அந்த 40 பேர்

ஒப்புக் கொண்டவர்கள் பட்டியல்: Abhijeet Bhattacharya, Kailash Kher, Mika Singh, Baba Sehgal, Jackie Shroff, Shakti Kapoor, Vivek Oberoi, Sonu Sood, Amisha Patel, Mahima Chaudhry, Shreyas Talpade, Puneet Issar, Surendra Pal, Pankaj Dheer, Nikitin Dheer, Tisca Chopra, Deepshikha Nagpal, Akhilendra Mishra, Rohit Roy, Rahul Bhat, Salim Zaidi, Rakhi Sawant, Aman Verma, Hiten Tejwani, Gauri Pradhan, Evelyn Sharma, Minissha Lamba, Koena Mitra, Poonam Pandey, Sunny Leonne, Raju Srivastava, Sunil Pal, Rajpal Yadav, Upasana Singh, Krushna Abhishek, Vijay Ishwarlal Pawar, Ganesh Acharya, Dancer Sambhavana Seth.

அந்த நான்கு பேர்
 

அந்த நான்கு பேர்

எவ்வளவு பணம் வேணும்னாலும் தருகிறோம். கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் எனக் கேட்ட போதும், தங்கள் அரசியல் கருத்துக்களை விற்பனை செய்யவதாக இல்லை என வெளிச்சம் போட்டுச் சொன்ன அந்த நான்கு பேருக்கும் ஒரு சல்யூட். Vidya Balan, Arshad Warsi, Raza Murad and Saumya Tandon. இந்தியாவின் பல மூலைகளில் இருக்கும் நெட்டிசன்களும் இந்த நால்வருக்கும் பலத்தை ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

என்ன டீல்

என்ன டீல்

மாதம் 5 - 6 முறை இந்த பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் இருந்து மேலிடம் சொல்லும் கருத்துக்களை தங்கள் வார்த்தைகளில் பதிவிட வேண்டும். சில விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவ்வலவு தான். இதற்கு பிரபலங்களுக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாதம் 2 லட்சம் ரூபாய் தொடங்கி மொத்த பேக்கேஜாக 20 கோடி ரூபாய் வரை கேட்டிருக்கிறார்கள். மார்ச் தொடங்கி ஆட்சியில் அமரும் வரை பதிவிர சுமார் 6 மாதங்களுக்கு பதிவிட டீல் பேசுகிறார்கள்.

எப்படிப் பேசினார்கள்

எப்படிப் பேசினார்கள்

பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் வெளியே தெரியாத மக்கள் தொடர்புத் துறை அமைப்புகள் போல ஒவ்வொரு பிரபலத்தையும் அணுகுகிறார்கள். விஷயத்தைச் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்கள். இந்த முதல் சந்திப்பிலேயே எப்படி செய்தி வரும். அதை நீங்கள் எப்படி உங்கள் வார்த்தைகளில் பதிவிட வேண்டும். எவ்வளவு தொகை என முழு விவரங்களையும் பேசு கிட்ட தட்ட பணம் தருவதை மட்டுமே பாக்கி வைக்கிறார்கள்.

யார் டார்கெட்

யார் டார்கெட்

பாலிவுட்டில் இரண்டாம் நிலை பிரபலங்கள், வளர்ந்து வரும் திறமைசாலிகள், ஏற்கனவே பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பிரபமான சமூக வலைதள பர்சனாலிட்டிகள் தான் இவர்கள் டார்கெட். இவர்களின் மேனேஜர்கள் வழியாக சந்தித்து விஷயத்தை விளக்கி, ஒரு முறை நேரிலும் பார்த்து ஒப்புதம் வாங்கிவிடுவார்கள்.

அனிருதா பால்

அனிருதா பால்

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோப்ராபோஸ்ட்டின் தலைமை ஆசிரியர் அனிருதா பால், ``இவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கட்டுமான விபத்துகள் போன்றவற்றில் அரசு எடுக்கும் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்குக் கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளனர். ஒரு போலி ஒப்பந்தம் மூலம் வேறொரு பொருளுக்கு விளம்பரம் செய்வதாக கையொப்பமிட்டுவிட்டு அரசியல் விளம்பரங்களைக் கமுக்கமாகச் செய்கின்றனர் இந்தப் பிரபலங்கள்" என்றார்.

பணப்பட்டுவாடா..?

பணப்பட்டுவாடா..?

மேலே சொன்ன படி விஷயங்களைப் பேசிய பின் பணப் பட்டுவாடாவை மொத்தமும் ரொக்கத்திலேயே கொடுக்கச் சொல்கிறார்கள். இல்ல சார் ஒரு சின்ன பிரச்னை உங்களுக்கு கொடுக்கும் பணம் எல்லாமே கறுப்புப் பணமாகத் தான் இருக்கும் பரவாயில்லையா என்றால் பரவாயில்லை. அந்த கறுப்பை வெள்ளையாக மாற்றுவதற்கும் கொஞ்சம் எக்ஸ்டரா கறுப்புப் பணத்தைக் கொடுத்துவிடுங்கள் என வெட்கமே இல்லாமல் கேட்கிறார்கள் இந்த பாலிவுட் கலைஞர்கள்.

ரிப்பிள் விளைவுகள்

ரிப்பிள் விளைவுகள்

A ripple effect is a situation in which, like ripples expanding across the water when an object is dropped into it, an effect from an initial state can be followed outwards incrementally. இப்படித் தான் விக்கிபீடியா இந்த விளைவைப் பற்றிச் சொல்கிறது. அதாவது ஒரு இடத்தில் தொடங்கப்படும் விளைவு அடுத்தடுத்து பரப்பு முழுமைக்கு விரிவடைந்து கொண்டே இருக்கும் என்பது தான் ரிப்பிள் விளைவின் பொருள். உதாரணத்துக்கு தண்ணீரில் விழும் மழைத்துளையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அது தான் நான்

அது தான் நான்

மேலே சொன்ன ரிப்பிள் விளைவைப் பற்றிப் கோப்ராபோஸ்ட் நிருபர்களிடமே விளக்கி நான் ஒரு பதிவு போட்டா அது முதலில் என்னுடைய ரசிகர்கள் மற்றும் பின் தொடர்பவர்களைச் சென்று சேரும். அதன் பின் அவர்கள் பகிர்வதால் அவர்களைப் பின் தொடர்பவர்களைச் சென்று சேரும் இப்படி என்னிடம் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் சுமாராக 80 - 90 லட்சம் பேரையாவது சென்று சேரும். ஆக என்னுடைய ஒரு ட்விட் சுமார் 1 கோடி பேரை சென்று சேரும். ஆகையால் எனக்கு அதிக தொகை வேண்டும் என கேட்டுப் பெறுகிறார்கள்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

மேலே உள்ள பிரபலங்களில் பலர் பேசியதும் வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறது கோப்ராபோஸ்ட். அதில் சன்னி லியோனிடம் பேசியதை மட்டும் இங்கே முழுமையாக கொடுக்கிறோம். கோப்ராபோஸ்டின் சன்னி லியோன் வீடியோவை முழுமையாகக் காண க்ளிக்கவும்: https://youtu.be/XeDRYu5Fw-I

சன்னி லியோன் அம்மையாருக்கு அறிமுகம் தேவை இல்லை. இவருக்கு ட்விட்டரில் 39 லட்சம் பேர் Follower இருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் சுமார் 23.5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால் இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.8 கோடி பேர் ஜொல்லி சொட்ட சொட்ட பின் தொடர்கிறார்கள்.

மும்பை அலுவலகம்

மும்பை அலுவலகம்

சன்னி லியோனின் மும்பை அலுவலகத்தில் அவரின் கணவர் டேனியல் வெப்பர் மற்றும் சன்னி லியோனின் மேனேஜர் உடன் கோப்ராபோஸ்டினர் பேசுகிறார்கள். எடுத்த உடனேயே நீங்கள் பாஜகவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். அதற்கு ஒரு பட்டியலையும் தயார் செய்து கொடுக்கிறார்கள். அதில் எதைப் பற்றி, எப்படி எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என கொடுக்கிறார்கள். அதோடு இது ஒரு ரகசிய உடன்படிக்கை என்பதால் யாருக்கும் தெரியக் கூடாது எனவும் கோப்ராபோஸ்டினர் சொல்கிறார்கள்.

ஏன்

ஏன்

தேர்தலில் மக்கள் கருத்து என்பது முக்கியம். ஒரு கட்சிக்கு பல பிரபலங்களே முன் வந்து சில கருத்துக்களைச் சொல்லும் போது மக்கள் கருத்து மாறி தங்களுக்கு சாதகமாக அமைந்து தேர்தல் வாக்கு வங்கி மாறும் என்கிற கணக்கு தான். இதை டேனியலும் புரிந்து கொண்டு ஓகே சொல்கிறார். ஆனால் பட்டியலில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்கிறார் சன்னி லியோனின் கணவர். சன்னி லியோனுக்கு கொடுத்த பட்டியலில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி இருந்தது. அதை மாற்றச் சொல்லி கேட்கிறார். இப்படிப்பட்ட முரணான விஷயங்களை சன்னி ட்விட் செய்தால் சந்தேகம் எழும். எனவே இவைகள் வேண்டாம் என்கிறார் டேனியல்.

உறுதி

உறுதி

சன்னி லியோன் மேடத்துக்கு எந்த தலைப்புகளில் எழுத வசதியாக இருக்கிறதோ அது போன்ற தலைப்புகளையோ கொடுக்கிறோம். உங்களுக்கு சரிப்பட்டு வராது எனத் தோன்றினால் மாற்றிக் கொள்ளலாம் எனவும் சொல்கிறார்கள் கோப்ராபோஸ்டினர். "பெண்களை மையப்படுத்தி உள்ள உஜ்வாலா திட்டம் போன்றவைகளைப் பற்றி பேசலாம்" என்கிறார் டேனியல். கோப்ராபோஸ்டினரும் ஆதரிக்கிறார்கள்.

பணம்

பணம்

பண விவரங்களைப் பேசும் போது டேனியல், சன்னி லியோனின் மேனேஜருக்கு வழி விடுகிறார். "மேடம் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மூன்றிலும் ஒரு முறை பதிவிட 15 லட்சம் வாங்குகிறோம். ஆக மாதம் ஐந்து பதிவுகள் என்பதால் 15 * 5 = 75 லட்சம் ரூபாய்" என பில் போடுகிறார். சம்மதிக்கிறார்கள். மாதம் 75 லட்சம் ரூபாயில் எவ்வளவு தொகை ரொக்கமாக வேண்டும் எனக் கேட்ட போது "முழுவதும் ரொக்கத்தில் இருந்தால் நல்லது" என்கிறார் டேனியல்.

முடியாது

முடியாது

75 லட்சத்தில் 7.5 லட்சம் ரூபாயை ஒரு விளம்பர ஒப்பந்தம் போல போட்டு வங்கிகளில் தான் செலுத்தப்படும். சில வருமான வரிப் பிரச்னைகள் காரணமாக எங்களால் முழு தொகையையும் ரொக்கத்தில் கொடுக்க முடியாது. அதனால் தான் இந்த 10 சதவிகிதத்தை மட்டும் வங்கியில் கொடுக்கிறோம். மீத தொகையை வேண்டுமானால் அப்படியே ரொக்கமாக கொடுத்து விடுகிறோம் என்கிறார்கள்.

இனி சன்னி உடன்

இனி சன்னி உடன்

கோப்ரா: வணக்கம் மேடம், நாங்க பிஜேபியில் இருந்து வந்திருக்கோம்

சன்னி: (ஹிந்தியிலேயே பேசுகிறார்) ஆமாங்க டேனியல் சொன்னாரு.

கோப்ரா: நீங்க ஹிந்தியில் பேசுறது ஆச்சர்யமா இருக்கு

சன்னி: சிரிக்கிறார்.

கோப்ரா: மேடம் நீங்க பாஜக கட்சியோ அல்லது எந்த ஒரு தலைவரையோ வெளிப்படையா ஆதரிக்காம, பாஜகவோட திட்டங்களை மட்டும் நேரடியா, அழுத்தமா ஆதரிச்சா போதும். உதாரணமா பேடி பசாவ், பேடி படாவ்.

சன்னி: நான் உண்மையாவே பாஜகவோட சில திட்டங்கள ஆதரிக்கிறேன். ஏன்னா எனக்கும் பெண் குழந்தை தான்.

கோப்ரா: உங்க வீட்டு வேலைக்காரி யாரோடாவது நின்னு போட்டோ எடுத்து, உஜ்வாலா திட்டத்தோட நேரடி பயனாளர்கள் இவங்க தான்னு போடுங்க. இப்படி ஐட்யா செட் பண்ணிக்குங்க மேடம்

சன்னி: கண்டிப்பா பண்றேன். அப்படியே என் புருசன் டேனியலுக்கு இந்திய குடிமகன் வழங்கிட்டா இன்னும் சந்தோஷமா மோடிய ஆதரிப்போம் என உரையாடலை முடிக்கிறார்கள்.

கோப்ரா: மேடம் பணம் விஷயம் எல்லா உங்க கணவர் கிட்ட பேசி இருக்கோம். ஏதாவது சந்தேகம் இருந்தா சொல்லுங்க நாம் பாத்து செஞ்சிக்கலாம். என்கிறார்.

சன்னி: ஆல் க்ளியர் என சிரிக்கிறார். உரையாடல் முடிகிறது.

மற்ற பிரபலங்களின் வீடியோ

மற்ற பிரபலங்களின் வீடியோ

Adhijeet Bhattacharya - https://youtu.be/BY88QLKGDfA

Jackie Shroff - https://youtu.be/d_aqgRVRfVU

Shakti kapoor - https://youtu.be/gyrzCVe5APo

Kailash kher - https://youtu.be/XeDRYu5Fw-I

Mika singh - https://youtu.be/ARXSrTv7QXY

Vivek Oberoi - https://youtu.be/QZGK29g8P1I

Sonu sood - https://youtu.be/s_MSRoMrC1Y

Amisha Patel - https://youtu.be/3l_q6IrCjCI

Rakhi sawant - https://youtu.be/vaoWOG-oXM4

Minissha lamba - https://youtu.be/l3A5yv5yNd8

Koena mitra - https://youtu.be/cpnUwBDd7d8

கேவலமா இல்ல..?

கேவலமா இல்ல..?

இதில் சோகம் என்னவென்றால் இவர்களில் சிலர் சமூகம் குறித்தும் அரசு குறித்தும் தீவிரமாக தங்கள் படங்கள் மூலம் கருத்து பேசுகிறார்கள். மேலே மாடிய 40 பேரில் விவேக் ஓபராயும் ஒருவர். ஆனால் இவர் தான் மேலே சொன்ன ரிப்பிள் விளைவுக் கதையைச் சொல்லி கூடுதல் காசு கேட்கிறார்.

மாறிய அரசியல் களம்

மாறிய அரசியல் களம்

பொதுவாக பிரசாரங்கள், அரசியல் எல்லாமே மேடைகளோடு முடிந்து விடும். ஆனால் இந்த தேர்தலில் இந்திய இணைய வெளியும், அமெரிக்க இணைய வெளி போல ஒரு முக்கிய களமாக கருதப்படுவதைத் தான் இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அதனாலேயே ஆன்லைனில் வரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து படிக்க வேண்டி இருக்கிறது.

கோரிக்கை

கோரிக்கை

அரசியல் கட்சிகள், செய்யும் செலவுகளை கண்கானிக்கும் தேர்தல் ஆணையம் இப்படி பிரபலங்களை விலைக்கு வாங்கி தேர்தல் பிரசாரம் செய்வதையும் கண்காணிக்க வேண்டும் என கோப்ரா போஸ்டின் ஆசிரியர் இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதுவரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் இல்லை.

வருந்துகிறோம்

வருந்துகிறோம்

இதே பாலிவுட்டில் இருந்து தான் பல்வேறு அரசியல் மாற்றங்கள் முன் வந்திருக்கிறது. ஒரு குடியானவனின் வருத்தங்களை, வலிகளை, சுதந்திரத் தாகங்களை, மனித உணர்வுகளை, மனித உறவுகளை எல்லாம் பேசி இருக்கிறது. அப்பேற்பட்ட கலைஞர்கள் தான் இன்று காசுக்காக தங்கள் கருத்தை விற்கிறார்கள் என்கிற செய்தியையும் படிக்க வேண்டி இருக்கிறது. பாலிவுட் கலைஞர்கள் ஏதோ இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் ஒரு பிரதேசம் அல்ல, அவர்களும் இந்த பெரிய நாட்டின் ஒரு அங்கம் தான் என்பதை உணர வேண்டும். உணர்வார்கள் என்றே நம்புகிறோம். மாற்றம் உங்களிடம் இருந்தே தொடங்கட்டும். தொடங்கும் என்றே நம்புகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sunny leone will receive rupees 75 lakh to tweet in favour of modi for 2019 election

sunny leone will receive rupees 75 lakh to tweet in favour of modi for 2019 election
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X