கடந்த மூன்று நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது.
கடந்த மூன்று நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது.
இந்தியா இன்று பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூடாரங்கள் மீது நடத்தி தாக்குதல் சுமார் 200 - 300 பேர் இறந்துவிட்டதை இந்திய அரசே உறுதி செய்திருக்கிறது.
அதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் போர் பேச்சுவார்த்தைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறதாம்.
தற்போது ரூபாய்
இப்போது மதியம் 01.00 மணி அளவில் ஒரு அமெரிக்க டாலருக்கு 71.1125 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 70.9812 விலையில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது.
என்ன ஆகும்
மக்களவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில், இப்படி தீவிரவாத தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தோனோடு போர் புரிவது பற்றிய செய்திகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருப்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சின்ன சின்ன ஏற்ற இறக்கங்களோடு வர்த்தகமாகுமாம்.
இந்தியா
பிப்ரவரி 14, 2019 அன்று காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் கொடுக்கும் விதத்தில் இன்ரு காலை 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அசால்டாக துவம்சம் செய்திருக்கிறது.
ராணுவம்
இதுவரை இந்திய ராணுவ தரப்பு இந்த தாக்குதல் குறித்து எந்த ஒரு செய்தியையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
மிக மோசம்
கடந்த 12 மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆசிய கரன்ஸிகளில் அதிகம் இறக்கம் கண்டது இந்திய ரூபாய் தான். இதில் பாகிஸ்தானுடன் போர் வேறு மூண்டால் இன்னும் இந்திய கரன்ஸியின் மதிப்பு சரியும் என சந்தை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications