வருமான வரித்துறையினர் கொடுக்கும் பான் அட்டைகளின் தேவையை வலுப்படுத்து ஒரு விதமாக ஒரு புதிய விஷயத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது.
வங்கிக் கணக்குகளுடன் பான் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால் தான் நாம் கூடுதலாக வருமான வரி கட்டி இருந்தால் அவைகளை Refund எனச் சொல்லி கறார் காட்டுகிறது மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை.

இப்போது வரை வருமான வரித்துறை மக்களுக்கான Refund தொகைகளை வங்கிக் கணக்குகளிலோ அல்லது காசோலைகள் மூலமாகவோ தான் கொடுத்து வந்தது. ஆனால் இனி முழுக்க முழுக்க வங்கிக் கணக்குகளுக்கே பனத்தை பரிமாற்றம் செய்ய இருக்கிறதாம்.
வரு செலுத்துபவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் வசதிக்காக வங்கிக் கணக்குகளோடு பான் கார்டும் இணைந்திருக்கிறதா என பார்க்க வருமான வரித்துறையே https://www.incometaxindiaefiling.gov.in என்கிற ஒரு வலைதளத்தில் வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, கடன் கணக்கு, ஓவர்டிராஃப்ட் கணக்கு என எந்த வகையான கணக்குகளாக இருந்தாலும் வருமான வரித்துறை Refund தொகையினைப் போடத் தயாராக இருக்கிறதாம்.
வரும் மார்ச் 31, 2019 தான் பான் அட்டைகளை ஆதாரோடு இணைக்கவும், வங்கிகளோடு பான் அட்டைகளை இணைக்கவும் கடைசி தேதியாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
இதுவரை 42 கோடி பான் அட்டைகள் வருமான வரித் துறையால் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் 23 கோடி பான் அட்டைகள் தான் ஆதாரோடு இணைத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications