முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டில் 15,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி: போட்டிகளை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பலவிதமான சலுகைகளை அள்ளி வழங்கியதால் நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் ஆர்.ஜியோவிற்கு ரூ.15000 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 2019-20ஆம் நிதியாண்டில் இந்த இழப்பு சரிசெய்யப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்,ஜியோவின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது வருவாய் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கக்கூடும் இருந்தாலும், அடுத்து வரும் 2019-20ஆம் நிதியாண்டில் ஆர்.ஜியோவின் சந்தாதாரர்களிடம் இருந்து கிடைக்கும் சேவைக்கட்டணங்களின் மூலம் இந்த வருவாய் இழப்பு சரிசெய்யப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் ஆர்.ஜியோ நிறுனத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
முகேஷ் அம்பானி தன்னுடைய தம்பியான அனில் அம்பானியின் ஆர்.காம்(R.COM) நிறுவனத்திற்கு போட்டியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜியோ நிறுவனத்தை தொடங்கினார். ஆயுள் முழுவதும் இலவச ஃபோன்கால் அழைப்புகள், அளவில்லாத இன்டெர்னெட் பயன்பாடுகள், இன்னும் என்னவெல்லாம் இலவசமாக வழங்கமுடியுமோ அத்தனையும் அளிப்பதாக அறிவித்து, மலிவு விலையில் கைபேசி வழங்குவதற்கு சுமார் ரூ.7,200 கோடி என சுமார் ரூ.2.6 லட்சம் கோடியை ஆர்.ஜியோவில் முதலீடு செய்தார்.
சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ
ஆர்.ஜியோ ஆரம்பிக்கப்பட்ட உடன் மற்ற போட்டி நிறுவனங்களான எர்டெல், வோடாஃபோன், ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், ஆர்.ஜியோவின் சலுகை அறிவுப்புகளுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன. இருந்தாலும் ஆர்.ஜியோ எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆர்.ஜியோவின் இலவச அறிவிப்புகளை கண்டு பிற நிறுவன சந்தாதாரர்களில் பெரும்பாலானோர் அந்த நிறுவனங்களை கைகழுவிவிட்டு ஆர்.ஜியோ இணைப்பிற்கு மாறிக்கொண்டனர்.
ஜியோ வருவாய் பற்றாக்குறை
பெரும்பாலான சந்தாதாரர்கள் ஆர்.ஜியோவிற்கு மாறியதால் பிற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், ஆர்.காம் வோடாஃபோன், ஐடியா ஆகிய அனைத்தும் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டன. தொடக்கத்தில் ஆர்.ஜியோவின் வருவாய் அதிகரிப்பதாக தோன்றினாலும், போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா நிறுவனங்களின் வருவாயை விட குறைவாகவே இருந்தது. நாளடைவில் ஆர்.ஜியோவின் வருவாய் குறைந்து வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கியது.
ஆய்வாளர்கள் அறிக்கை
நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் மட்டும் வருவாய் பற்றாக்குறை பிற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா நிறுவனங்களின் வருவாய் பற்றாக்குறையைவிட அதிகமாக இருக்கும் என சான்ஃபோர்டு சி பெர்ன்ஸ்டீன் அன் கோ நிறுவனத்தின் ஆய்வாளர்களான கிரிஷ் லேன் மற்றும் சாமுவேல் சென் ஆகியோர் ஆர்.ஜியோவிற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.
நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதை அடுத்து 12 மாதத்தில் சந்தாதாரர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வருவாயைக் கொண்டும், சேவைக் கட்டணங்களைக் கொண்டும் சரி செய்துகொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட்
ஜியோ வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் 2018 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 830 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகத் திரும்ப வாங்கிக்கொள்ளக்கூடிய குறைந்த டெபாசிட் தொகையுடன் மானிய விலையில் வழங்கப்படும் ஜியோ போன்கள், ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கில் வழங்கப்படுகிறது.
வருவாய் பெருக வாய்ப்பு
சந்தாதாரர்களுக்கு சலுகை விலையில் மொபைல்ஃபோன் வழங்குவதற்காகவே ரிலையன்ஸ் ரீடெய்ல் லிட் என்னும் நிறுவனம் இருந்தாலும் இந்நிறுவனத்தின் குழப்பமான கணக்கு வழக்குகளால், இந்நிறுவனத்தின் லாப நட்டத்தை தெளிவாக அறுதியிட்டு கூறமுடியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். செல்போன் செலவைக் கணக்கில் கொள்ளும்போது, மூன்றாவது காலாண்டுக்கான இழப்புத் தொகை 3,800 கோடி ரூபாயாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கூடவே, இந்நிறுவனம், பங்குச் சந்தை முதலீட்டில் நுழைந்தால் முதலீடு அதிகரித்து வருவாயும் கூடும், முதலீட்டின் மீதான வருமானமும் கூடும், சலுகை விலை மொபைல் ஃபோன்களை வழங்குவதை குறைக்க முடியும். அதனால் சந்தாதாரர்களிடம் இருந்து கிடைக்கும் வருவாயும் பெருகும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் இழப்பு
நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் போட்டி நிறுவனங்களான வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களின் நிகர வருவாய் இழப்பு ரூ.3200 கோடியாக இருக்கும் என்றும், பார்தி ஏர்டெல்லின் நிகர வருவாய் இழப்பு ரூ.750 கோடியாக இருக்கும் என்றும் புளும்பெர்க் நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயத்தில் ஆர்.ஜியோவின் நிகர வருவாய் இழப்போ ரூ.15000 கோடியாக இருக்கும் என்றும் சான்ஃபோர்டு சி பெர்ன்ஸ்டீன் அன் கோ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications