ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் புக் செய்வது ரொம்ப ஈசி - டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும்

ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது டிக்கெட் கிடைக்காவிட்டால், பிடித்தம் செய்த பணம் உடனே திரும்ப கிடைத்துவிடும்.

டெல்லி: ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன் பதிவு டிக்கெட் கிடைக்காவிட்டால், பிடித்தம் செய்த பணம் உடனே திரும்ப கிடைத்துவிடும்.

இதற்கான பேமண்ட் கேட்வே சேவையான IRCTC IPay அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற பேமண்ட் சேவையில் உள்ளது போலவே IRCTC IPay பேமண்ட் சேவையிலும், ஆன்லைன், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யூபிஐ போன்ற வழிகளில் பணப் பரிவர்த்தனை செய்வது எளிது.

 ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி

பயணத்திற்காக ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து உடனடியாக பணம் எடுக்கப்பட்டுவிடும். ஒரு வேளை டிக்கெட் கிடைக்காவிட்டால் பிடித்தம் செய்த பணம் நம்முடைய வங்கி கணக்கில் வரவு வைக்க குறைந்தது 3 நாட்களாவது ஆகும்.

உடனடியாக

உடனடியாக

இனிமேல், பிடித்தம் செய்த பணம் உடனடியாக நம்முடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இதற்கான பேமண்ட் கேட்வேயை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

காத்திருக்க வேண்டாம்

காத்திருக்க வேண்டாம்

வெளியூர்களுக்கு ரயிலில் செல்ல விரும்புவோர்களில் பெரும்பாலானர்வர்கள் முன்பதிவு செய்துவிட்டு செல்வது வழக்கம். இப்படி முன்பதிவு செய்ய முன்பெல்லாம் ரயில் நிலையத்திற்கு சென்று கால்கடுக்க காத்திருந்து டிக்கெட் வாங்கிச் செல்வது வழக்கம்.

ஆன்லைன்

ஆன்லைன்

பின்னர் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் நடைமுறை வந்த பின்னர் பெரும்பாலான மக்கள் ரயில் நிலையம் சென்று டிக்கெட் புக்கிங் செய்வதையே மறந்துவிட்டனர்.

ஒரு வசதி

ஒரு வசதி

ரயில் நிலையம் சென்று டிக்கெட் புக் செய்யும் போது ஒரு வசதி இருக்கின்றது. டிக்கெட் கிடைக்காவிட்டாலோ அல்லது காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் கிடைத்தாலோ, நாம் உடனடியாக டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

காத்திருப்போர் பட்டியல்

காத்திருப்போர் பட்டியல்

ஆனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஒருவேளை நமக்கு டிக்கெட் கிடைக்காவிட்டாலோ அல்லது காத்திருப்போர் பட்டியல் (waiting list) டிக்கெட் கிடைத்தாலோ, புக்கிங் செய்த டிக்கெட்டை ரத்து செய்தால், நம்முடைய பணம் வங்கிக் கணக்கில் வந்து சேர குறைந்தது 3 நாட்களாவது எடுத்துக் கொள்ளும்.

கால தாமதம்

கால தாமதம்

ஆன்லைன் டிக்கெட்டை ரத்து செய்தவுடன் நம்முடைய பணம் நம் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர கால தாமதம் ஆவதற்கு முக்கிய காரணம், ஐஆர்சிடிசி இணையதளம், பணப் பரிவர்த்தனைக்கு மூன்றாம் நபரான பேடிம்(Paytm) செயலியை பயன்படுத்தியதே ஆகும். இனிமேல் அந்தக் கவலை நமக்கு தேவையில்லை.

ஐஆர்சிடிசி ஐபே

ஐஆர்சிடிசி ஐபே

ஆம் ஐஆர்சிடிசி இணையதளம், பணப்பரிவர்த்தனைக்கு புதியதாக ஐஆர்சிடிசி ஐபே (IRCTC IPay) என்ற பேமண்ட் கேட்வே சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஐஆர்சிடிசி ஐபே பேமண்ட் கேட்வே மூலம் பணம் செலுத்துவதில் மிகப் பெரிய நன்மை நமக்கு கிடைக்கும். அதாவது, ஐஆர்சிடிசி பேமண்ட் கேட்வே மூலம் பணம் செலுத்தும்போது, எந்தவிதமான தடங்களும் இல்லாமல் நமக்கு உடனடியாக டிக்கெட் ஒதுக்கப்பட்டுவிடும்.

வங்கிக் கணக்கு

வங்கிக் கணக்கு

மாறாக நமக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் கூட நாம் நகத்தைக் கடித்துக்கொண்டு 3 நாட்களுக்கு குளிக்காமல் கொள்ளாமல் காத்திருக்க தேவையில்லை. டிக்கெட்டை ரத்து செய்த உடனே நம்முடைய வங்கிக் கணக்கில் பணம் வந்து விழுந்துவிடும்.

டெபிட், க்ரெடிட், யூபிஐ

டெபிட், க்ரெடிட், யூபிஐ

மற்ற பேமண்ட் சேவையில் உள்ளது போலவே IRCTC IPay பேமண்ட் சேவையிலும், ஆன்லைன், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யூபிஐ போன்ற வழிகளில் பணப் பரிவர்த்தனை செய்வது எளிது. இந்தப் புதிய பேமண்ட் கேட்வேயை ஐஆர்சிடிசி யின் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாளியான டெல்லியைச் செர்ந்த MMAD கம்யூனிகேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

தாமதம்

தாமதம்

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பெரும்பாலும் டிக்கெட் கிடைப்பதில்லை. அதிலும் தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் கோடை விடுமுறை நாட்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் கிடைப்பது என்பது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.

புகார்கள்

புகார்கள்

இதைப்பற்றிய புகார்களை பொது மக்கள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்தே ரயில்வே நிர்வாகம் புதிதாக ஐஆர்சிடிசி ஐபே என்னும் பேமண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+