கணவர் இறந்துவிட்டார், தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை...! 2 வயது மகளோடு போராடி வென்ற பெண்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஹீமாவுக்கு வயது 28. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். பெயர் நசீமா. 24 வயதில் தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ராஜாவை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் தனியார் ஐடி நிறுவனத்தில் நல்ல வேலையில் தான் இருந்தார். மாதம் 80,000 ரூபாய் சம்பளம். நசீமா பிறந்த பின் ரஹீமாவை வேலைக்கு அனுப்ப விருப்பமில்லாமல் நசீமாவை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார் காதல் கணவர்.

சந்தோஷமான குடும்பம் தான். ஆனால் துரதிஷ்ட வசமாக 2018 ஏப்ரலில் நடந்த கார் விபத்தில் கணவர் இறந்து போனார். விபத்தில் சின்ன காயங்களோடு ரஹீமாவும், நசீமாவும் தப்பினார்கள்.

இடிந்து போனாள்

இடிந்து போனாள்

ரஹீமாவுக்கு கை கால் ஓடவில்லை. உருகி உருகி ஐந்து ஆண்டுகளாக துரத்தி துரத்திக் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட காதல் கணவன் இன்று இல்லை. சரி மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவாவது யாராவது வேண்டும் என்பதால் ரஹீமா தன் பெற்றோரிடம் சென்றாள். ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

திருமணமான புதிதில் 2014-ல் தான் கணவன் மனைவியாக சேர்ந்து 45 லட்சம் ரூபாய்க்கு ஆலந்தூரில் வீடு வாங்கி இருந்தார்கள். அந்தக் கடனில் சுமார் 30 லட்சம் ரூபாய் அசல் தொகையும், 25 லட்சம் ரூபாய் வட்டி என ஒரு 55 லட்சம் தொடர்ந்து இ.எம்.ஐ செலுத்த வேண்டும்.

குழந்தையின் எதிர்காலம்

குழந்தையின் எதிர்காலம்

நசீமாவின் எதிர்கால பள்ளி மற்றும் கல்லூரி செலவுகள், திருமன செலவுகள், சடங்குகள், விருந்துகள் என மகளுக்குத் தேவையான எல்லாவற்றியும் செய்ய வேண்டும். அதோடு தங்கள் அன்றாட வாழ்கைக்குத் தேவையான உணவு, உடை, போக்குவரத்து, சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதுக்கு எல்லாம் ஏதாவது செய்ய வேண்டும் ஆக இதற்கு இன்றைய சூழலுக்கு குறைந்தது 80,000 ரூபாயாவது சம்பளமாக கிடைக்க வேண்டும்.

வேலை தேடல்

வேலை தேடல்

கணவர் இறந்து அடுத்த வாரத்தில் இருந்து வேலை தேடுகிறாள். ஆனால் 50,000 ரூபாய்க்கு மேல் எங்கும் சம்பளம் தரத் தயாராக இல்லை. சரி என ந்த 50,000 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்கிறாள். அப்போது தான் எதார்த்தமாக ரஹீமா கணவரின் டைரி நினைவுக்கு வருகிறது.

அந்தக் கவர்

அந்தக் கவர்

ஒரு கொரியர் கவரில் "If I left you forever, please open and do the needful with love xxxxxxx" என ஒரு அன்புக் கடிதத்துடன் கொரியர் கவர் இருக்கிறது. அதைத் திறக்கிறாள் ரஹீமா. முதலில் எல் ஐ சி டேர்ம் இன்ஷூரன்ஸ் விவரங்கள் இருக்கின்றன. அதோடு ஒரு கடிதமும் இருக்கிறது. "ரஹீமா, இந்த விவரங்களை வைத்துக் கொண்டு எல்ஐசி-யிடம் க்ளெய்ம் வாங்கு ஒரு கோடி ரூபாய்க்கு நம் குடும்ப உறுப்பினர்களுக்கு உன்னிடம் சொல்லாமல் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தேன். நான் செய்ய வேண்டிய கடமைகளை இந்த பணத்தின் மூலம் நீ செய்யலாம்" என இருந்தது

டேர்ம் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்

டேர்ம் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்

ராஜாவின் டேர்ம் இன்ஷூரன்ஸ் விவரங்களோடு எல் ஐ சி அலுவலகத்தை அணுகி தேவையான சான்றுகளைக் கொடுக்கிறாள். அப்போது எல் ஐ சி "உங்கள் கணவர் இந்த பாலிசியை வீட்டுக் கடனோடு இணைத்திருக்கிறார். ஆக அவர் இறந்துவிட்ட காரணத்தால் இந்த ஒரு கோடி ரூபாயில் இருந்து வங்கிக்கு செலுத்த வேண்டிய அசல் மற்றும் கடன் தொகைகளை செலுத்திக் கொள்ளலாம். என்கிறார்கள்"

கொஞ்சம் சந்தோஷம்

கொஞ்சம் சந்தோஷம்

ராஜாவின் டேர்ம் இன்ஷூரன்ஸ் கெளெய்ம் விவரங்களோடு கடன் கொடுத்த ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தை அணுகுகிறாள். "எல்ஐசி சொல்வது போல நீங்கள் ஒரே அடியாக முழு கடனையும் இப்போது அடைக்கலாம். ஆனால் செலுத்தும் மொத்த தொகையில் 1% கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்" என மொட்டையாக முடித்துவிட்டார்கள்.

மேலும் விவரங்கள்

மேலும் விவரங்கள்

ரஹீமாவின் நண்பர்களிடம் பேசி வீட்டுக் கடனை மொத்தமாக ஒரே நேரத்தில் அடைத்தால் வட்டி 14 வருடங்களுக்கு கட்டத் தேவை இல்லை. ஆக 1% கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் பரவாயில்லை. இப்போதே அடைப்பது என முடிவெடுக்கிறாள்.

என்ன கணக்கு.

என்ன கணக்கு.

மேலே சொன்னது போல ஜனவரி 2019-ல் இருந்து 30 லட்சம் ரூபாய் அசல் தொகைக்கு 8.8% வட்டியை 15 வருடங்களுக்கு கணக்கிட வேண்டும். ஆக அசல் 30 லட்சம் ரூபாய் + வட்டி 24.12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் செலுத்தினால் அசல் 30 லட்சம் ரூபாய் + ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2019 ஆகிய 3 மாதங்களுக்கான வட்டியாக 36,230 ரூபாய் + மொத்த தொகையில் 1% கட்டணம் 30,360 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். இந்த ஒரு விஷயத்தால் மட்டும் 23.34 லட்சம் ரூபாய் மிச்சம்.

எதிர்காலம்

எதிர்காலம்

இனி தங்குவதற்கு பிரச்னை இல்லை. வீடு ரஹீமாவுக்கு சொந்தமாகிவிட்டது. ராஜாவின் டேர்ம் இன்ஷூரன்ஸில் இருந்து வந்த க்ளெய்ம் தொகையான ஒரு கோடி ரூபாயில் 30.70 லட்சம் ரூபாய் போக 69.30 லட்சம் ரூபாய் கையில் இருக்கிறது. இதில் ஒரு 10 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் நசீமாவின் படிப்புக்காக முதலீடு செய்துவிட்டாள் ரஹீமா.

படிப்புக்கு எந்த ஃபண்டில்

படிப்புக்கு எந்த ஃபண்டில்

பொதுவாகவே ரஹீமாவுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரிய பயம் உண்டு. வந்தால் நல்ல வருமானம் வரும். போனாலும் பலமாகப் போகும். எனவே கடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறாள். ஆண்டுக்கு 7 - 8% வருமான வந்தால் கட்டாயம் வந்துவிடும். மிக முக்கியமாக வரும் மியூச்சுவல் ஃபண்டுகளை விற்று வருமானம் வந்தால் தான் வரி கட்ட வேண்டும். வங்கிகளைப் போல பணத்துக்கு பணம் கொடுத்தாகிவிட்டது என வரும் வட்டி வருமானத்துக்கு வரி கட்டத் தேவை இல்லை.

எவ்வளவு வளரும்

எவ்வளவு வளரும்

2019-ல் முதலீடு செய்யப்படும் 10 லட்சம் ரூபாய் நசீமாவின் 17-வது வயதில் சுமார் 27.59 லட்சமாக அதிகரித்திருக்கும். ஆக அன்றைய கல்லூரி செலவுகளுக்கு இது ஓரளவுக்கு போதுமானதாக இருக்கும்.

திருமணம் மற்றும் தங்கம்

திருமணம் மற்றும் தங்கம்

69.30 லட்சத்தில் - 10 லட்சம்கல்விக்குப் போக மீதம் 59.30 லட்சம் இருக்கிறது. அதில் இன்னொரு 10 லட்சத்துக்கு ஆர்பிஐ வழங்கும் தங்கக் காசுகளையும், மற்றும் ஒரு 10 லட்சம் ரூபாயை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்கிறாள். இந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் சராசரியாக குறைந்தபட்சம் 12 சதவிகிதமாவது வருமானம் கிடைக்கும். இதற்கும் மியூச்சுவல் ஃபண்டுகளை விற்று வருமானம் வந்தால் தான் வரி கட்ட வேண்டும். ஆக வரும் வருமானத்துக்கு வரி கட்டத் தேவை இல்லை. இந்த 10 லட்சம் ரூபாய் 20 ஆண்டு கால முடிவில் 96 லட்சமாக இருக்கும்.

இனி நசிமா கவலை இல்லை

இனி நசிமா கவலை இல்லை

69.30 லட்சத்தில் - 30 லட்சம் ரூபாயை கடன் மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்த பின் பாக்கி 30 லட்சம் ரூபாய் கையில் இருக்கிறது. இந்த தொகையை அப்படியே நசீமா பெயரில் எஃப்டியாக போட்டு ஆண்டுக்கு 8% வருமானம் ஈட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் ரஹீமா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

rahima a single women who takes care of her daughter with brilliant investments

rahima a single women who takes care of her daughter with brilliant investments
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X