கடந்த சில வருடங்களில் உலகப் புகழ் பெற்ற பதஞ்சலி நிறுவனம் வட இந்தியாவின் யோகா சாமியார் பாபா ராம்தேவுடையது.
இவர் FMCG என்றழைக்கப்படும் நுகர்வோர்கள் அன்றாடம் பயன்படுத்தும் துறையில் இறங்கி டூத் பேஸ்ட் (பற்பசை) தொடங்கி பிஸ்கெட் பாக்கெட், சமையல் எண்ணெய் என பல பொருட்களை அதிரடியாக களம் இறக்கியது.
இவர்கள் பிசினஸுக்கு வரும் முன்பே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி எல்லாம் செய்வதாக இல்லை எனச் சொல்லி இருந்தார்கள்.
தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தியாவைச் சேர்ந்த 13 ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மீது பதஞ்சலி பொருட்களை சட்ட விரோதமாக மறு பேக்கிங் செய்து ஏற்ருமதி செய்ததாக தில்லி உயர் நீதிமன்றத்தில் குற்றம் வழக்கு தொடுத்திருக்கிறார் பாபா ராம்தேவ்
Food and Drug Administration
இந்த 13 ஏற்றுமதியாளர்களும் முறையாக அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி இருந்தாலும், பதஞ்சலியின் பொருட்களை ஏற்றுமதி செய்ய பதஞ்சலி நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு ஒப்புதலும் பெறவில்லையாம். அதோடு இந்தியாவில் உனவுகள் மற்றும் மருந்துகளுக்கு முறையாக அனுமதி கொடுக்கும் Food and Drug Administration-ன் அனுமதியும் இந்த நிறுவனங்கள் வாங்கவில்லையாம்.
அலட்சியம்
ஒரு நிறுவனத்திடம் முறையான Food and Drug Administration உரிமங்கள் மற்றும் அனுமதிகள் இருந்தால் தான் அவர்களால் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் இங்கு அந்த Food and Drug Administration உரிமங்களே இல்லாமல் செய்திருப்பதையும் பதஞ்சலி கேள்வி எழுப்பி இருக்கிறதாம்.
சுங்கவரித் துறை
இந்த வழக்கில் சுங்க வரித் துறையினரையும் சேர்த்திருக்கிறார்களாம். இனியும் சுங்க வரித்துறையினர் பதஞ்சலியின் பொருட்களை பதஞ்சலியின் முறையான அனுமதி இல்லாமல் ஏற்றுமதிகளுக்கு அனுமதிக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் தான் சுங்கவைத்துறையினரைச் சேர்த்திருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications