டிசிஎஸ், சிடிஎஸ், இன்ஃபோசிஸ்-ல் இருந்து வருகிறீர்களா..? விசா ரிஜெக்டெட் போங்க..!

தலைப்பிலேயே செய்தி சொல்லிவிட்டோம். 2018-ம் ஆண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், காக்னிசண்ட், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று பணி புரிய அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பித்திருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விசா மறுத்திருக்கிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு 2,042 விசாக்களும், டிசிஎஸ் நிறுவனத்துக்கு 1,744 விசாக்களும் மறுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க குடியுரிமை மையமே தெரிவித்திருக்கிறது.

இதை எல்லாம் விட கொடுமையான விஷயம் அமெரிக்க நிறுவனமாக காக்னிசண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்குத் தான் அதிக விசாக்கள் மறுக்கப்பட்டிருக்கிறதாம். சிடிஎஸ்-க்கு மட்டும் 3,548 விசாக்கள்.

சிடிஎஸ் அதிகம்

சிடிஎஸ் அதிகம்

விசாவுக்கு விண்ணப்பித்த நிறுவனங்களிலேயே அதிக சதவிகித விசாக்கள் மறுக்கப்பட்டது சிடிஎஸ்-க்குத் தான் என்பதும் பெட்டிச் செய்தி

அந்த 6 நிறுவனங்கள்

அந்த 6 நிறுவனங்கள்

டாப் 30 ஐடி நிறுவனங்களுக்கு விசா மறுப்புச் சொல்லி இருக்கிறது அமெரிக்க குடியுரிமை அலுவலகம். அதில் 2/3 மறுப்புக்கள் நம் ஆறு இந்திய நிறுவனங்களுக்கு மறுத்திருக்கிறார்களாம். சுருக்கமாக 30 ஐடி நிறுவனங்களுக்கு 100 விசா மறுத்திருக்கிறார்கள் என்றால், அதில் 66 விசா மறுப்புகள் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, சிடிஎஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களுக்குத் தான்.

மொத்தம் விண்ணப்பம்

மொத்தம் விண்ணப்பம்

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, சிடிஎஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் ஆகிய 6 இந்திய ஐடி நிறுவனம் சுமார் 13,400 விசாக்களும் விண்ணப்பித்தது. இதில் வெறும் 2,145 விசாக்கள் மட்டும் தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

அமேஸானை விடக் குறைவு

அமேஸானை விடக் குறைவு

அமேஸான் நிறுவனமும் இந்தியர்களை தொடர்ந்து வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2018-ல் அமேஸான் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 2399 விசாக்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் ஆறு பெரிய இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் சேர்த்து 2,145 விசாக்களைத் தான் வழங்கி இருக்கிறது அமெரிக்க குடியுரிமை அலுவலகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+