இந்தியாவில் வேலை இல்லை என சொன்னால் நீங்கள் தீவிரவாதி தான், Anti Indian தான்.! அடித்துச் சொன்ன பாஜக.!

லக்னெள: பாரதிய ஜனதா கட்சியின், சாமியார் யோகி ஆதித்யநாத் முதல்வராக ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில், லக்னெளவில் தான் இந்த கொடூரம் நடந்திருக்கிறது.

தங்களுடைய கருத்தை, குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கருத்தை வெளிப்படையாகச் சொன்னால் அடித்துத் துவைத்துவிடுவார்கள் பாஜகவினர் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முசாபர்நகர் காவலர்களும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் சட்டம் தன் கடமையைச் செய்யும் எனச் சொல்லி முடித்துவிட்டார்கள்.

ஒரு இளைஞன் கருத்து

ஒரு இளைஞன் கருத்து

அட்னன் என்கிற ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் தன் நண்பர்களோடு முசபர்நகர் வீதிகளில் சென்று கொண்டிருக்கிறான். ஒரு மீடியா வாகனத்தைப் பார்த்த உடன் அவர்களிடம் தன் கருத்தைப் பகிர்ந்து கொள்ளச் செல்கிறான். அந்த மீடியா நபர்களும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார்கள்.

வேலையா..?

வேலையா..?

உத்திரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த் பின்னும் சாலைகள் ஒன்றும் மாறவில்லை. வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. சொல்லப் போனால் பயங்கரமாக குறைந்திருக்கிறது என ஒவ்வொன்றாக பதிவு செய்கிறார். பெரும்பாலும் அம்மாநிலத்தை ஆளும் பாஜகவினருக்கு எதிரான கருத்துக்கள் தான்.

சுருக்கமாக பெரிதாக ஒன்ரும் நடக்கவில்லை

சுருக்கமாக பெரிதாக ஒன்ரும் நடக்கவில்லை

எல்லா கேள்விகளுக்கும் தன் அதிருப்தையைப் பதிவு செய்து கொண்டிருந்தான் அட்னன். சுருக்கமாக "பாஜக ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு விஷயமும் பெரிதாக மாறவில்லை" என அட்னன் தன் கருத்தை முடித்துக் கொண்டான்.

பாஜக அடிதடி

பாஜக அடிதடி

இந்த பேட்டியைக் பார்த்துக் கொண்டிருந்த பாஜக தொண்டர்கள், அட்னன் பேசி முடித்ததும், முடிக்காததுமாக அவனை கண் மூடித்தனமாக தாக்கத் தொடங்குகிறார்கள். பாஜக ஆதரவாளர்கள் ஒரு மீடியாவின் முன் நின்று ஒருவனை தாக்கிக் கொண்டிருப்பதைக் கூட உணரவில்லை.

இஸ்லாமிய தீவிரவாதி

இஸ்லாமிய தீவிரவாதி

அட்னனைத் தாக்கும் போது "இவன் ஒரு தீவிரவாதி" "இந்த முஸ்லீம்களுக்கே இது தான் வேலை" "இவன் ஒரு ஆண்டி இந்தியன்" எனச் சொல்லிக் கொண்டு கூட்டமாக, மிக மூர்க்கமாக தாக்குகிறார்கள். இப்படி பாஜகவினர் ஒரு அப்பாவில் இளைஞனைத் தக்கியதைக் குறித்து கட்சி மேலிடம் எதுவும் சொல்லவில்லை. ஆக தன்னை எதிர்ப்பவனை, தனனை எதிர்த்துப் பேசுபவனின் குரல் வலையை நெறி என்பதை பாஜக சொல்லாமல் சொல்கிறது. தன்னை எதிர்த்து பிரசாரம் செயப்வனை ஆண்டி இந்தியன் என முத்திரை குத்தச் சொல்கிறது.

காவல் துறை

காவல் துறை

முசாபர்நகர் காவல் நிலையத்தில் இதைக் குறித்து விசாரித்த போது "குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவோம்" எனப் பேசி மழுப்பி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அட்னனைத் தாக்கியவர்களில் ஒருவரைக் கூட கைது செய்யவில்லை.

சமாஜ்வாடி எதிர்ப்பு

சமாஜ்வாடி எதிர்ப்பு

சமாஜ்வாடி கட்சியின் சுனில் சிங் "பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். யார் உண்மையைப் பேச முன் வந்தாலும் அவர்களை இந்தியாவுக்கு எதிரானவர்கள் எனச் சொல்வது தான் பாஜக அடியாட்களின் வேலை. இதை சமாஜ்வாடி வன்மையாக கண்டிக்கிறது. காவலர்கள் உடனடியாக குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும்" எனவும் சமாஜ்வாதி சார்பாக பேசி இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+