அமெரிக்காவில் இந்தியன் வேலை பார்க்க வேண்டுமா, வேண்டாமா? வெள்ளை மாளிகையில் நீங்களும் வாக்களிக்கலாம்.!

அமெரிக்கா: 2015-ம் ஆண்டு பாரக் ஒபாமாவினால் கொண்டு வரப்பட்டது தான் இந்த H4 விசா.

மே 26, 2015 முதல் H1-B விசா வைத்திருப்பவரின் மனைவி / கணவன்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளை H4 விசாவில் அமெரிக்கா அழைத்து வரலாம்.

ஆனால் இன்று ஹெச் 4 விசாவின் கீழ் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஒரு பெரிய வாழ்வாதார உரிமையை பறித்துக் கொள்ள முயற்சிக்கிறது அமெரிக்கா.

H4 விசா

H4 விசா

H1-B visa வில் அமெரிக்காவில் வேலை பார்த்து வாழும் இந்தியர்களின் மனைவி அல்லது கணவன்மார்கள் தங்கள் குடும்பத்தோடு வாழ, அமெரிக்க அரசால் H4 விசா வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக H1-B visa வில் இருந்து அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற (Green Card-க்கு முயற்சிப்பவர்கள்) முயற்சி செய்து கொண்டிருப்பவர்களின் துணைகள் மற்றும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே இந்த H4 விசா வழங்கப்படும்

வேலைக்குத் தடை

வேலைக்குத் தடை

இதனால் அமெரிக்காவில் H1-B visa எடுத்து வேலை பார்க்கும் ஏகப்பட்ட இந்தியர்களின் மனைவிமார்கள் மற்றும் கணவன் மார்கள் இந்த H4 ரக விசாக்களை பயன்படுத்தி அமெரிக்காவில் குடியேறினர். இன்னும் கூட குடியேறி வருகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் செலவுகளை ஒருவர் சம்பாத்தியத்தில் கட்டுப்படுத்தி வாழ்வது எல்லாம் சிரமம். அதனால் பொதுவாக H1-B visa-க்கு H4 விசா எடுத்துச் செல்லும் குடும்பத்தினர்களும் அமெரிக்காவிலேயே ஏதாவது ஒரு பகுதி நேர அல்லது முழு நேர வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார்கள்.

H-4 EAD (employment authorisation document)

H-4 EAD (employment authorisation document)

என்ன தான் விசா வாங்கினாலும் அதோடு மேலே தலைப்பில்சொல்லி இருக்கும் வேலை பார்பப்தற்கான அதிகாரபூர்வ கடிதம் (EAD - Employment Authorisation Document) இல்லை என்றால் அமெரிக்காவில் எங்குமே வேலை பார்க்க முடியாது. கிட்ட தட்ட வொர்க் பர்மிட் போல என வைத்துக் கொள்ளுங்களேன்.

தடை

தடை

இப்போது H4 விசா மூலம் அமெரிக்கா வந்தவர்கள் அமெரிக்காவில் தங்கள் கணவர் அல்லது மனைவியோடு தங்கிக் கொள்ளலாமே தவிர எங்கும் வேலை பார்க்கக் கூடாது என ஒரு வரைவுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது ட்ரம்ப் அரசு. அதாவது H4 விசா வழங்கப்படும். ஆனால் வேலை பார்பப்தற்கான EAD (employment authorisation document) வொர்க் பர்மிட் வழங்கப்படாது.

இந்தியர்களுக்கு பாதிப்பு

இந்தியர்களுக்கு பாதிப்பு

இந்த சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இந்திய குடும்பங்கள் தான். ஹெச் 1 பி விசாவில் அதிகம் அமெரிக்காவில் வாழ்பவர்களும் இந்தியர்கள் தான். அந்த ஹெச் 1 பி விசாவைக் காரணம் காட்டி அதிக ஹெச் 4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை செய்பவர்களும் இந்தியர்கள் தான். இதை அமெரிக்க குடியுரிமை அலுவலகமே ஒப்புக் கொள்கிறது.

எத்தனை பேர்

எத்தனை பேர்


அமெரிக்க குடியுரிமை அலுவலகத்துக்கு ஒரு ஆண்டு என்பது அக்டோபர் 01-ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டில் செப்டம்பர் 30-ல் முடிகிறது.
2015-ம் ஆண்டில் 25,854 பேருக்கு ஹெச் 4 விசா வழங்கப்பட்டது. அதில் 24,791 பேர் இந்தியர்கள்.
2016-ல் மொத்தம் 31,017 பேருக்கு ஹெச் 4 விசா, அதில் 28,6620 பேர் இந்தியர்கள்.
2017-ல் மொத்தம் 27,275 பேருக்கு ஹெச் 4 விசா, அதில் 24,779 பேர் இந்தியர்கள்.
2018-ல் மொத்தம் 6,800 பேருக்கு ஹெச் 4 விசா, அதில் 6,130 பேர் இந்தியர்கள் என அமெரிக்க குடியுரிமை அலுவலகம் சொல்லி இருக்கிறது.

பெட்டிஷன்

பெட்டிஷன்

அதனால் ஹெச் 4 விசாவுக்கு EAD (employment authorisation document) ரத்து செய்யும் வரைவு மசோதாவை எதிர்த்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் வலைதளத்தில் ஒரு பெட்டிஷனைத் தொடங்கி இருக்கிறார்கள் இந்தியர்கள். மார்ச் 08-ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி இந்த பெட்டிஷனில் 55,321 பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க காலாச்சாரம்

அமெரிக்க காலாச்சாரம்

அமெரிக்க வெள்ளை மாளிகை வலைதளத்தில் கொண்டு வரப்படும் பெட்டிஷன்களில் ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டால், வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அந்த பிரச்னைக்கு பதிலளிக்க வேண்டும். கிட்ட தட்ட மக்கள் பிரச்னையை அதிகாரபூர்வமாக அரசு கேட்டுக் கொள்கிறது என வைத்துக் கொள்ளலாம்.

முன்னெடுக்கும் அமைப்பு

முன்னெடுக்கும் அமைப்பு

ஐடி ப்ரோ அலையன்ஸ் (IT Pro Alliance) என்கிற லாப நோக்கற்ற அமைப்பு அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 22, 2019 அன்று வெள்ளை மாளிகை வலைதளத்தில் தொடங்கிய ஹெச் 4 விசாவுக்கான (EAD - Employment Authorisation Document) பிரச்னையை பதிவிட்டதும் இவர்கள் தான்.

கோரிக்கை

கோரிக்கை

அமெரிக்காவில் வாழ விரும்புபவர்கள் அனைவரும் இந்த பெட்டிஷனில் கையெழுத்துப் போட வேண்டும். இப்போது உடனடியாக ஹெச் 4 விசாவுக்கான (EAD - Employment Authorisation Document) கொண்டு வரப்படவில்லை என்றாலும், வருங்காலங்களில் கொண்டு வரப்படலாம். எனவே தயவு செய்து இந்தியர்களின் வாழ்வுரிமைக்கு வாக்களியுங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் ஐடி ப்ரோ அலையன்ஸ் அமைப்பின் நிர்வாகி தன் நந்தன்.

ஆதரிக்கிறீர்களா..? வாக்களியுங்கள்

ஆதரிக்கிறீர்களா..? வாக்களியுங்கள்

நீங்கள் ஹெச் 4 விசாவுக்கான வேலை வாய்ப்புகளை ஆதரிப்பவராக இருந்தால் இந்த லிங்கில் க்ளிக்கி உங்கள் வாக்கைப் பதிவுச் செய்ய்யுங்கள்: https://petitions.whitehouse.gov/petition/h4-ead-please-do-not-revoke-h4-ead-policy

எப்படி வாக்களிக்க வேண்டும்

எப்படி வாக்களிக்க வேண்டும்

லிங்கில் உள்ளே சென்ற உடன் வலது பக்கத்தில்
First name
Last name
Mail id
போன்றவைகளைக் கேட்டிருப்பார்கள். நம் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைக் குறிப்பிட்ட பின், நம் மின்னஞ்சலுக்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு சரி பார்ப்பு லிங்க் வரும். அந்த லிங்கில் ஒரு கடிதம் போல வாக்களித்தமைக்கு நன்றி என வரும். அதில் Confirm your signature by clicking here. என்பதைச் சொடுக்கினால்.... மீண்டும் அமெரிக்க வெள்ளை மாளிகை பக்கத்துக்குச் சென்று "வாக்களித்தமைக்கு நன்றி என வரும்" இப்படி வந்தால் தான் நாம் முழுமையாக வக்களித்ததாக அர்த்தம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+