சில தினங்களுக்கு முன் தான் மத்திய அரசு புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அதிகாரபூர்வ கெஸாட் குறிப்பை வெளியிட்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் - பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது 20 ரூபாய் நாணயத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதேபோல 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என அனைத்து டினாமினேஷன்களுக்கும் புதிய நாணயங்களை வெளியிட்டிருக்கிறது அரசு. இவை அனைத்தும் வட்ட வடிவில் இருக்கும். இதில் நாணயங்களின் மதிப்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்தப் புதிய நாணயங்கள் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள், கையில் எடுத்ததும் உடனடியாக எளிதில் உணரும் வகையில் வடிவமைத்து இருக்கிறார்களாம். இதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு பெருமை பட்டுள்ளார்.
2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்புக்குப் பின் மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. அதில் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் எளிதில் கண்டுணரும் வகையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டனவாம். இதற்கு முன்பு வெளியான நாணயங்களை பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் உணர்வதில் இருந்த சில சிக்கல்களை புதிய நாணயங்களில் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைத்து தவிர்க்கப்பட்டிருக்கிறதாம். பொருளாதார விவகாரத் துறையின் செயலர் சுபாஷ் சந்திர கார்க் இதனைத் தெரிவித்தார். இந்த புதிய 20 ரூபாய் நாணயங்கள் எப்போது மக்கள் புழக்கத்துக்கு வரும் என்கிற விவரங்கள் சொல்ல வில்லை.


Click it and Unblock the Notifications