டெல்லி : விஷயம் புரிந்திருக்குமே...? அதே தான் இனி இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் (Driving License), ஒரே மாதிரியான வாகனப் பதிவுச் சான்றிதழ்களை (Registration Certificate) வழங்க இருக்கிறார்கள்.
இப்போது வரை இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரியான வாகன பதிவுச் சான்றிதழ்களை வழங்குகிறது. ஓட்டுநர் உரிமம் கூட ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடுகிறது.
ஆனால் இனி ஆதார் கார்டைப் போல இந்தியா முழுமைக்குm அனைத்து மாநிலங்களும் மத்திய அரசு சொல்லும் மாதிரி தான் ஒட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை கொடுக்கப் போகிறது.
ஏன் இந்த மாற்றம்
தற்போது இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களை முறையாக நிர்வகித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. ஒருவர் பல முறை தவறு செய்திருந்தால் கூட அவர் புதிதாக ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிப்பது போல விண்ணப்பித்து பழைய குற்றங்களில் இருந்து தப்பி விடுகிறார். ஆக இந்த பழைய குற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள புதிய ஓட்டுநர் உரிமங்களை அனாவசியமாக கொடுப்பதை நிறுத்த புதிதாக வடிவமைக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டு வருகிறார்களாம்.
ஏன் வாகன பதிவுச் சான்றுகள்
புல்வாமா தாக்குதலில் ஒரு மாருதி வேனை வைத்து தான் தாக்குதலைத் திட்டமிட்டார்கள். அதில் கடைசியாக யார் அந்த மாருதி வேனை வாங்கினார்கள் என்கிற விவரத்தையும் சிரமப்பட்டு தான் கண்டு பிடிக்க வேண்டி இருந்தது. ஆகையால் தான் புதிய வாகன பதிவுச் சான்றுகளில் ஒரு வாகனம் புதிதாக பதிவு செய்வதில் இருந்து கடைசியாக அழிக்கப்படும் வரை அனைவரின் விவரங்களையும் ஒரே சிப்பில் வைக்குமாறு ஒரு புதிய வாகனப் பதிவுச் சான்றைக் கொண்டு வருகிறார்களாம்.
வரும் அக்டோபர் 01, 2019
வரும் அக்டோபர் 01, 2019 முதல் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதாக இருந்தாலும் சரி, புதிய ஓட்டுநர் உரிமத்தை வாங்குவதாக இருந்தாலும் சரி எல்லாமே புதிய மாடல் படி தான் கிடைக்கும். அதே போல் புதிய வாகனங்களை பதிவு செய்தாலும் சரி பழைய வாகனங்களை மறுப் பதிவு செய்தாலும் சரி புதிய மாடல் பதிவுச் சான்றிதழ்கள் தான் வழங்கப்படுமாம்.
என்ன ஸ்பெஷல்
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ்களின் வடிவம், நிறம், வாட்டர்மார்க் வரை எல்லாமே ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். இந்த இரண்டிலுமே க்யூ ஆர் கோட் இருக்கும். அந்த க்யூ ஆர் கோட் மூலம் ஒருவர் செய்திருக்கும் போக்குவரத்து விதிமீறல்கள், தவறுகளை எல்லாமே ஒரு க்ளிக்கில் கண்டு கொள்ளலாம். இதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் மத்திய காவலர்கள் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கிறார்களாம்.
கூடுதல் அம்சங்கள்
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ்களில் ஒரு சிப் கார்டையும் உடன் இணைக்க இருக்கிறார்கள். இந்த சிப்பில் ஒருவரின் அல்லது ஒரு வாகனத்தின் விவரங்களை சேமித்து வைத்திருப்பார்களாம். இப்போதைக்கு குறைந்தபட்சம் கடந்த 10 ஆண்டுகள் வரையான விவரங்களை பதிவு செய்து கொள்ள முடியும் படிக்கு வடிவமைக்கிறார்களாம். இனி வரும் காலங்களில் இந்த வருட எண்ணிக்கை அதிகரிக்கப்படுமாம்..
உறுப்பு தானம்
ஒருவர் உறுப்பு தானத்துக்கு ஒப்பளித்திருந்தால் அந்த சான்றிதழ்களும் இந்த சிப்களிலேயே சேமித்து வைக்கப்படுமாம். அதோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை ஓட்டுபவர் என்றால் அதையும் குறிப்பிட்டு காரணங்களை சொல்லி இருப்பார்களாம். ஆக ஒரு மாற்றுத் திறனாளி தனக்காக மாற்ரி அமைக்கப்பட்ட வாகனத்தை ஓட்டுகிறார் என்றால், அவரைப் பற்றிய விவரங்களும் இந்த சிப்பில் இருக்கும். இப்படி ஒருவரின் முழு விவரங்களும் இருப்பதால் போக்குவரத்து காவலர்கள் இன்னும் சிறப்பாக செயல்படலாமெனச் சொல்கிறது மத்திய அரசு.
நாள் ஒன்றுக்கு
இன்றைய தேதிக்கு இந்தியாவில் 32,000 ஓட்டுநர் உரிமங்கள் புதிதாகவோ அல்லது புதுப்பிக்கவோ செய்கிறார்களாம். ஒரு நாளுக்கு 43,000 வாகனக்களை புதிதாகவோ அல்லதுபழைய வாகனங்களை மறு பதிவோ செய்கிறார்களாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications