ஃபியூச்சர் குழுமம், இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் ரூ.150 முதல் 200 கோடி வரைதனியாக முதலீடு மேற்கொள்ள இருக்கிறார்களாம்.
இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் மட்டும் சுமார் 25 பிக் பசார் அவுட் லெட் கடைகளை நிறுவ இருக்கிறார்கள்.

வரும் ஏப்ரல் 2019-ல் இருந்து இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் கடை திறப்பதற்கான வேலைகளைத் தொடங்க இருக்கிறார்களாம்.
இந்த விரிவாக்கம் மற்றும் புதிய பிக் பசார் அவுட் லெட்டுகள் துகுறித்து பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கிழக்குப் பகுதி தலைமை செயல் அதிகாரி மணிஷ் அகர்வால் "கிழக்கு இந்திய பகுதிகளில் இருந்து தான் இந்தியாவின் மொத்த விற்பனையில் 25 சதவீதம் விற்பனை வருவாய் வருகிறது.
ஆக இன்னும் கொஞ்சம் பிக் பசாரை அவுட் லெட்டுகளை வைத்தால் இன்னும் வருவாய் கூடுவதற்கான வாய்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இந்தியாவின் கிழக்கு பகுதியில் மட்டும் நல்ல வாடிக்கையாளர்கள் இருக்கக் கூடிய இடங்களில் 25 அவுட் லெட்டுகளை திறக்க இருக்கிறோம்" என்றார்.
இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா ஆகிய இடங்களில் இருந்து வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. கிழக்கு இந்தியப் பகுதிகளின் மொத்த வருவாயில் மேற்கு வங்கத்தின் இருந்து மட்டும் சுமார் 30 சதவிகிதம் வரை விற்பனை வருவாய் வருகிறதாம்.
கொல்கத்தா நகரத்தில் மட்டும் 7 - 8 கடைகளை திறக்க இருக்கிறார்களாம். சமீபத்தில் தான் பிக் பசார் கொல்கத்தாவில் தன் 17-வது கடையையும், மேற்குவங்கத்தின் தன் 30-வது கடையையும் திறந்தது.
ஒரு பிக் பசார் கடையின் கட்டமைப்புகளுக்கு மட்டும் ஒரு சதுர அடிக்கு சுமார் 2,000 ரூபாய் வரை செலவழிக்க இருக்கிறார்களாம். இதையும் மணீஷ் அகர்வால் உறுதி செய்திருக்கிறார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications