இனி ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த நவம்பர் 2018-ல் இருந்து ஈரான் மீது அமெரிக்க தன் பொருளாதார தடைகளை விதித்தது.

அப்போது இந்தியாவுக்கு வேறு வழியில்லாமல் ஈரான் உடனே தன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை வைத்துக் கொண்டது.

அதற்கு அமெரிக்காவும் நட்பு நாடு என்கிற ரீதியில் இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள அனுமதித்தது.

ரூ.35.74 கோடியாக அதிகரித்த திமுகவின் வருமானம் - ரூ.12.72 கோடியாக குறைந்த அதிமுக வருமானம் ரூ.35.74 கோடியாக அதிகரித்த திமுகவின் வருமானம் - ரூ.12.72 கோடியாக குறைந்த அதிமுக வருமானம்

2019-ல்

2019-ல்

இப்போது இந்தியா, ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. நாள் ஒன்றுக்கு சுமார் 3,00,000 பேரல் கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்தச் சலுகை மே 04, 2019 உடன் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.

தடை நீக்கம்

தடை நீக்கம்

முதல் முறை அனுமதி கொடுத்த போதே மே 2019 உடன் இந்தியா, ஈரானிடம் எந்த ஒரு வர்த்தகத்திலும் ஈடுபடக் கூடாது அதற்குள் இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வேறு எதாவது நாடுகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளத் தயாராக தொடங்க வேண்டும் என்றது அமெரிக்கா.

அமெரிக்க தரப்பு

அமெரிக்க தரப்பு

இதுவரை அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மே 04, 2019-க்குப் பின்னும் நீக்கச் சொல்ல் இந்தியாவிடம் இருந்து எந்த ஒரு முறையான கடிதங்களோ பேச்சு வார்த்தைகளோ நடக்கவில்லை. ஆனால் ஈரானிடம் வர்த்தகம் செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். இதை இந்திய வெளியுறவுத் துறையும் ஒப்புக் கொண்டது.

ஈரான்

ஈரான்

ஈரான் ஒரு பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இருக்கின்ற போதும், அமெரிக்காவின் தடை காரணத்தால் தன் பழைய எண்ணெய் வியாபாரத்தை செய்ய முடியாமல் தடுமாறுகிறது. இந்த பொருளாதார தடைக்கு முன் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பேரல்களை விபணை செய்து வந்த ஈரான் இப்போது பொருளாதார தடைக்குப் பின் வெறும் 12.5 லட்சம் பேரல்களை மட்டுமே ஏற்றுமதி செய்து வருகிறது.

ஈரான் இந்தியா

ஈரான் இந்தியா

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் ஈரானுக்கு ஏழாவது இடம். பொருளாதார தடைக்கு முன் ஈரான் தான் இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் சப்ளையர். ஆக ஒரு பக்கம் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு சாதகமாக தன் கச்சா எண்ணெய் தேவையை குறைத்துக் கொண்டு, மீதமுள்ள சப்ளையை ஈரான் உடன் தொடர்ந்து வாங்கவும் அமெரிக்காவோடு பேச்சு வார்த்தை நடத்துகிறது இந்தியா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india is in a conversation with america to buy oil from iran over its economic sanction after may 2019

india is in a conversation with america to buy oil from iran over its economic sanction
Story first published: Sunday, March 10, 2019, 16:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X