இந்தியாவில் 13000 கோடி fraud, இங்கிலாந்தில் 750 கோடிக்கு ஒரு வீடு.. சொகுடு வாழ்கை வாழும் நீரவ் மோடி!

தமிழகத்தில், ஏன் இந்தியாவில், அவ்வளவு ஏன்..? உலக அரங்கிலேயே பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் புகழ் நீரவ் மோடிக்கு அறிமுகம் தேவை இல்லை.

பஞ்சாப் நேஷனல் பேங்கின் ஊழியர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, பஞ்சாப் நேஷனல் பேங்கின் பெயரிலேயே போலியாக Letter of Undertaking-களை வாங்கி அவைகளை பணமாக்கி தங்கள் பிசினஸை வளர்த்தவர் நீரவ் மோடி.

ஒவ்வொரு Letter of Undertaking-க்கும் எவ்வளவு தொகையை கொடுப்பதாகச் சொல்கிறார்களோ... அவ்வளவு தொகை வங்கியில் டெபாசிட்டாக இருக்க வேண்டும். ஆனால் நீரவ் மோடி ஒரு ரூபாய் கூட வங்கியில் டெபாசிட் வைக்காமல், 13,000 கோடி ரூபாய் வரை Letter of Undertaking பெற்று சந்தோஷமாக செலவழித்திருக்கும் விஷயம் வெளியே வந்த போது தான் ஊழல் என்றே தெரிய வருகிறது.

லண்டன் தப்பி ஓட்டம்

லண்டன் தப்பி ஓட்டம்

இந்த பிரச்னை இந்தியாவில் வெடித்துக் கொண்டிருக்கும் போதே குடும்பத்தோடு லண்டன், பார்படாஸ், ஆண்டிகுவா என பல நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்கள் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி குடும்பத்தினர். போலி பாஸ்போர்ட்டில் பல நாடுகளுக்கு தப்பி ஓடியதாக சிபிஐயும் சொல்லி இருக்கிறது.

டெலிக்ராஃப் நிருபர்

டெலிக்ராஃப் நிருபர்

நீரவ் மோடியை இந்திய அரசு பிடிக்குமோ பிடிக்காதோ... ஆனால் லண்டன் பத்திரிகை அவர்களைப் பிடித்து பேட்டி எடுத்திருக்கிறது. டெலிக்ராஃப் பத்திரிகை நிருபர் மைக் ப்ரவுன் கேட்கும் எந்த கேள்விக்கும் நீரவ் மோடி பதிலளிக்கவில்லை. எதைக் கேட்டாலும் Sorry No Comments என அசால்டாக டீல் செய்திருக்கிறார். அப்போதும் டெலிக்ராஃப் பத்திரிகையாளர் தன்னால் முடிந்த வரை விரட்டிக் கொண்டே சென்றிருக்கிறார்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

நிருபரின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு டாக்ஸி பிடித்து தப்புகிறார், நம் இந்திய பஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ் நீரவ் மோடி. டெலிக்ராஃப் பத்திரிகையாளர் 1. இன்னும் எத்தனை நாள் லண்டனில் தங்க இருக்கிறீர்கள்...? 2. நீங்கள் லண்டனில் அரசியல் அடைக்களம் வேண்டி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்களா..? 3. நீங்கள் ஏகப்பட்ட இந்திய மக்களுக்கு நிறைய பணத்தைக் கொடுக்க வேண்டி இருக்கிறதே..? 4. நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள யார் அதிகம் விரும்புவார்கள்..? 5. நீங்கள் இன்னும் வைர வியாபாரத்தில் செய்கிறீர்களா..? என வளைத்து வளைத்துக் கேட்டிருக்கிறார் மைக் பிரவுன்.

வீடியோ

இந்த பேட்டி வீடியோவை டெலிகிராப் நிறுவனம் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த டெலிக்ராஃப் நிறுவன பேட்டி வீடியோவைக் காண இங்கே க்ளிக்கவும்

ஆளே மாறிட்டாப்புல

ஆளே மாறிட்டாப்புல

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உடல் எடை அதிகரித்திருக்கிறாராம். அதோடு எப்போதும் நகு நகுவென ஷேவ் செய்து வைத்திருக்கும் முகத்தில் இப்போது கொஞ்சம் தாடி, அபிநந்தன் ஸ்டைலின் மீசை என தோற்றத்தில் பெரிய மாற்றம் உள்ளதாம். இதனால் எளிதில் நீரவ் மோடியை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையாம்.

9 லட்சத்துக்கு கோட்

9 லட்சத்துக்கு கோட்

ஒரு முன்னனி பிராண்டின் பிங்க் நிற காட்டன் சட்டை அதற்கு மேட்சான பேண்ட். அதற்கு மேல் சுமார் 10,000 பவுண்ட் ஸ்டெர்லிங் விலை கொண்ட கருப்பு நிற டிசைன் செய்யப்பட்ட ஜாக்கெட் என ராஜா கணக்கில் இன்னும் ஆடைகளை உடுத்தி வருகிறாராம்.

மோடி வீடு

மோடி வீடு

டெலிக்ராஃப் பத்திரிகையாளர்கள் நிரவ் மோடி லண்டனில் எப்படி வாழ்கிறார் என்ன செய்கிறார் என்பதைக் கூட விசாரித்திருக்கிறார்கள். சுமார் 8 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புள்ள சொகுசு வீட்டில் தான் வாழ்ந்து வருகிறாராம். இந்திய மதிப்பில் சுமார் 72.5 கோடி ரூபாயாம். இந்த பங்களாவின் மாத வாடகை மட்டுமே சுமார் 15,000 பவுண்ட் ஸ்டெர்லிங்காம். இந்திய ரூபாயில் வாடகை மதிப்பு மட்டும் சுமார் 13.5 லட்சம் ரூபாய்.

வைர வியாபாரம்

வைர வியாபாரம்

லண்டனில் பணக்காரர்கள் அதிகம் வாழும் பகுதி சொஹோ. இந்த சொஹோ பகுதியில் மீண்டும் ஒரு வைர வியாபாரத்தை நீரவ் மோடி நடத்தி வருகிறாராம். அதோடு லண்டன் மக்களுக்கு வழங்கப்படும் தேசிய இன்ஷூரன்ஸ் எண்ணும் (National Insurance Number) நீரவ் மோடியின் போலி பாஸ்போர்ட் அடிப்படையில் வழங்கி இருக்கிறார்களாம். இங்கிலாந்து எப்படி ஒரு நபரின் போலி பாஸ்போர் அடைப்படையில் ஒருவருக்கு இங்கிலாந்தின் தேசிய இன்ஷூரன்ஸ் எண்ணை வழங்கினார்கள். அதூவ்ம் இண்டர்போலில் ரெட் நோட்டிஸ் வழங்கி இருக்கும் ஒருவருக்கு..? என இந்திய வெளிஉறவுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பி இருக்கிறதாம்.

இண்டர்போல் கடிதம்

இண்டர்போல் கடிதம்

வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடியின் குடும்பத்தினர் பல்வேறு நாடுகளுக்கு தப்பி ஓடியது தெரிய வந்த உடனேயே அவர்களுக்கு எதிராக இன்டர்போலில் ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

இந்திய தரப்பு

இந்திய தரப்பு

"நீரவ் மோடி லண்டன் சாலைகளில் சுற்றித் திரியும் வீடியோ நம் கைவசம் இருப்பதால் மட்டும் அவரைப் பிடித்துவிட முடியாது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசிடம் முறையாக பேசி வருகிறோம். Extradition நோட்டீஸும் வழங்கி இருக்கிறோம். ஆக யாராக இருந்தாலும் சரி இந்திய அரசை ஏமாற்றிவிட்டுச் சென்றவர்களை மீண்டும் இந்தியா கொண்டு வந்து அவர்களை சட்டத்தின் முன் நிற்க வைப்போம்" எனச் சொல்கிறார்கள் இந்திய வெளி உறவுத் துறை அதிகாரிகள்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

"என்ன மோடிஜி நீங்க செய்ய வேண்டிய வேலைய லண்டன் மீடியாகாரங்க செய்றாய்ங்க..? உங்களால நீரவ் மோடி இருப்பிடத்தக் கண்டு பிடிக்க முடியல இல்லையா..? ஏன் நீரவ் மோடி மாதிரி ஆட்கள பாதுகாக்க நினைக்கிறீர்கள்..?" என வழக்கம் போல மோடியை ஒரண்டை இழுத்திருக்கிறார் ராகுல் காந்தி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+